நவம்பர் 21 பேரணிக்கு முன் எதிர்க்கட்சிகள் தமது தலைமைத்துவத்தையும் இலக்கையும் தெளிவுபடுத்த வேண்டும் – திலும் அமுனுகம

29 Oct, 2025 | 02:22 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நவம்பர் 21 ஆம் திகதி பேரவாவியில் மீண்டும் நீராடுவதற்காகவா எதிர்கட்சியினர் கொழும்புக்கு வருகிறார்கள்.  கொள்கையற்ற வகையில் செயற்பட முடியாது. ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் தலைமைத்துவம் மற்றும் இலக்கு குறித்து முதலில் தெளிவுப்படுத்த வேண்டும் என சர்வஜன சக்தியின் தேசிய அமைப்பாளர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஒரு இலட்சம் ரூபாய் கொடுத்தால் கொலை செய்யும் ஆட்கள் உள்ளார்கள். பாதாளக்குழுக்களை மாத்திரம் நாட வேண்டிய அவசியம் கிடையாது. தேசிய பாதுகாப்பு பலவீனப்படுத்தப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி என்பதால் அரசாங்கத்தின் அனைத்து செயற்பாடுகளையும் நாங்கள் விமர்சிக்க போவதில்லை.ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் சகல எதிர்க்கட்சிகளும் இல்லை.எதிர்க்கட்சித் தலைவரும் இல்லை.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் எண்ணக்கரு தெளிவற்றதாக உள்ளது.ஆகவே இந்த ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் நாங்கள் அங்கம் வகிக்க போவதில்லை. எதிர்வரும் மாதம் 21 ஆம் திகதி நுகேகொடையில் பேரணி நடத்துவதாக குறிப்பிடுகிறார்கள்.

நவம்பர் 21 ஆம் திகதி பேரவாவியில் மீண்டும் நீராடுவதற்காகவா இவர்கள் கொழும்புக்கு வருகிறார்கள்.  கொள்கையற்ற வகையில் செயற்பட முடியாது. ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் தலைமைத்துவம் மற்றும் இலக்கு குறித்து முதலில் தெளிவுப்படுத்த வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதி அநுரகுமாரவின் இரண்டு ஆண்டுகள் ஆட்சிக்காலத்தில்...

2026-09-13 07:19:20
news-image

இன்றைய வானிலை

2026-09-13 07:09:30
news-image

எதிர்க்கட்சிகளின் கூட்டிணைவு எனக்கு சவாலல்ல :...

2026-09-13 01:58:06
news-image

அநுரவின் அடக்குமுறைக்கு அடிபணியப்போவதில்லை : நாமலை...

2026-09-13 01:50:30
news-image

சத்துருக்கொண்டான் படுகொலைகள் தொடர்பில் சர்வதேச நீதி...

2026-09-12 17:43:54
news-image

வடக்கு, கிழக்கு வலிநது காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளிடம்...

2026-09-12 16:48:40
news-image

சுதந்திர கட்சிக்கு அழைப்பில்லை சாமர சம்பத்...

2026-09-12 17:44:08
news-image

நாமல் சிறைசென்றுள்ளமை அரசியல் பழிவாங்கல் அல்ல...

2026-09-12 17:17:36
news-image

செயற்கையான டீசல் தட்டுப்பாட்டை உருவாக்கி எரிபொருள்...

2026-09-12 17:15:27
news-image

சுண்டிக்குளம் மற்றும் கட்டைக்காடு கடற்பகுதியில் சட்டவிரோத...

2026-09-12 18:02:29
news-image

லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலை சி.டி.ஸ்கேன் நிதி...

2026-09-12 17:44:49
news-image

வவுனியா வெடுக்குநாறிமலையில் பௌத்த பிக்கு தலைமையிலான...

2026-09-12 17:16:55