2025 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் ஆண்டுக்கு ஆண்டு 32% அதிகரிப்புடன் வளர்ச்சிப் பதிவுசெய்துள்ளது ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் லைஃப்

29 Oct, 2025 | 01:01 PM
image

ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் லைஃப்  2025 செப்டம்பர் 30 ஆம் திகதியுடன் முடிவடைந்த ஒன்பது மாதங்களில் நிறுவனத்தின் வணிக சக்தி மற்றும் மீள்தன்மையினை பிரதிபலிக்கும் வகையில் ஒரு சிறந்த செயல்திறனைப் பதிவு செய்துள்ளது.இந்நிறுவனமானது மொத்த வருவாய் மதிப்பீடான 23.6 பில்லியனை அடைந்ததன் மூலமாக (ஆண்டுக்கு ஆண்டு 32% வளர்ச்சி) அடைந்ததன் மூலமாக வரிக்கு முந்தைய லாபம் ரூ.23.9 பில்லியனை பதிவுசெய்துள்ளது, இது 11% வளர்ச்சியைக் குறிக்கின்றது.

அத்தோடு ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் லைஃப் ஆனது 5.4 பில்லியனை புதிய வணிக பிரீமியங்களில் அடைந்ததன் மூலம் நாட்டில் சிறப்பாகச் செயல்படும் ஆயுள் காப்பீட்டாளர்களிடையே அதன் நிலையை வலுப்படுத்தி 61% குறிப்பிடதக்க வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.நிறுவனத்தின் வலிமையான நிதி நிர்வாகம் மற்றும் சிறந்த செயல்பாட்டு திறனை வெளிப்படுத்தும் வகையில் வரிக்கு பிந்தைய இலாபமாக 22 பில்லியனை பதிவு செய்துள்ளது.

காப்புறுதிதாரர்கள் மீதான நிறுவனத்தின் உறுதிப்பாட்டை மேலும் நிரூபிக்கும் வகையில், ஒன்பது மாத காலத்தில் நிறுவனம் ஏரத்தாள ரூ. 13.2 பில்லியனை காப்புறுதி கோரல்கள்; மற்றும் முதிர்வு தீர்வுகளாக வழங்கியிருந்தாலும், கடந்த வருடத்தின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடும் போது 49%வளர்ச்சியை அடைந்துள்ளது.

இச்செயல்திறனானது ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் லைஃப்பின் வலிமையான நிதிநிலை மற்றும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றுவதில் நிறுவனம் செலுத்தும் அதிசிறந்த கவனம் என்பனவே இச்செயல்திறனை அடைய வழிவகுத்துள்ளது. ரூ. 264 பில்லியன் சொத்து அடிப்படையுடனும், தொழில்துறையில் ரூ. 239 பில்லியன் மதிப்புள்ள  மிகப்பெரிய ஆயுள் நிதியத்துடனும், ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் லைஃப்பானது ஒப்பிடமுடியாத நிதி நிலைதன்மை மறறும் சிறந்த நிர்வாகத்தினையும் கொண்டுள்ளது.

படம்:- ஸ்ரீலங்கா இன்சூரன்சின் தலைவர் நுஷித் குமாரதுங்க கூட்டத்தில் உரையாற்றும் போது இடமிருந்து வலமாக - ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் லைஃப்பின் தலைமை அதிகாரி – தயாரட்ண பெரேரா, ஸ்ரீலங்கா இன்சூரன்ஸின் தலைமை நிதியியல் அதிகாரி – சிறியானி குலசிங்க, ஸ்ரீலங்கா இன்சூரன்ஸின்  தலைவர் - நுஷித்த குமாரதுங்க, ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் -பொது பிரதம நிறைவேற்று அதிகாரி – னுச.சமீர தர்மசேன, ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ்- பொது –தலைமை அதிகாரி- ஆசிரி விக்ரமாராச்சி ஆகியோர் ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்