மக்கள் வங்கியும் Japan Remit Finance நிறுவனமும் 5 ஆண்டு கால கூட்டாண்மையை வலுப்படுத்தியுள்ளன

29 Oct, 2025 | 01:00 PM
image

மக்கள் வங்கியானது Japan Remit Finance Company Ltd நிறுவனத்துடன் பேணி வருகின்ற அதன் பணப்பரிமாற்ற கூட்டாண்மையை மேலும் விரிவுபடுத்தியுள்ளது.

ஜப்பானிலுள்ள மக்கள் வங்கியின் பிரதான பணப்பரிமாற்ற கூட்டாளர்களில் ஒன்றாக 2020 மே முதல் Japan Remit Finance Company Ltd (JRF) நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இந்த ஒத்துழைப்பானது தங்குதடையின்றி, மற்றும் திறன்மிக்க முறையில் ஜப்பானிலிருந்து இலங்கைக்கு பணப் பரிமாற்றங்களை மேற்கொள்ள இடமளித்துள்ளதுடன், வெளிநாடுகளில் வசிக்கின்ற, மற்றும் தொழில் புரிகின்ற இலங்கை மக்களுக்கு சௌகரியமான வங்கிச்சேவை தீர்வுகளை வழங்குவதில் மக்கள் வங்கி கொண்டுள்ள அர்ப்பணிப்பையும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.  

ஜப்பானிலுள்ள இலங்கை கிளை முகாமையாளரும், JRF ன் உத்தியோகபூர்வ பிரதிநிதியுமான ஆர்.எம். தரங்க ரணஜீவ பண்டார அவர்களின் தலைமையில் துசுகு தூதுக்குழுவினர் அண்மையில் கொழும்பு 02 ல் அமைந்துள்ள மக்கள் வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.

பிரதம நிறைவேற்று அதிகாரிஃபொது முகாமையாளர் கிளைவ் பொன்சேகா, பிரதிப் பொது முகாமையாளர் - தனிநபர் வங்கிச்சேவை மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர் சேவைகள் அருணி லியனகுணவர்த்தன, மற்றும் ஏனைய சிரேஷட அதிகாரிகள் இத்தூதுக் குழுவினருடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.

நாடு கடந்த பணப்பரிமாற்றங்களுக்கு ஓத்துழைப்பை வலுப்படுத்தி, சேவையின் திறனை மேம்படுத்தி மற்றும் நவீன டிஜிட்டல் தீர்வுகளை அறிமுகப்படுத்துவது குறித்து கலந்துரையாடல்களின் போது கவனம் செலுத்தப்பட்டது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்