நீதிமன்றங்களை டிஜிட்டல் மயப்படுத்தும் திட்டம் விரைவில் – பிரதம நீதியரசர்

Published By: Vishnu

28 Oct, 2025 | 08:50 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

இந்த காலாண்டுக்குள் குறைந்தபட்சம் 50 அல்லது 60 நீதிமன்றங்களை டிஜிட்டல் மாயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.  இதன் மூலம் வழக்கு தொடுப்பவர்களுக்கான செலவும் குறைவடையும் என பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தெரிவித்தார்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த தேசிய சட்ட மாநாடு திங்கட்கிழமை (27) கண்டியில் இடம்பெற்றது. இதில்  பிரதம அதிதியாக கலந்துகாெண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

இலங்கையில் ஒருசில நிறுவனங்கள் தற்போது பகுதியவில் டிஜிடல் மயப்படுத்தப்பட்டிருக்கின்றன. எடுத்துக்காட்டாக, பதிவாளர் நாயகம் காரியாலயம், குடிவரவு குடியல்வு காரியாலயம், நீர் மற்றும் மின் கட்டணம் போன்றவை டிஜிட்டல் மயமாக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் நீதிமன்ற கட்டமைப்பு இன்னும் கைகளாலும் ஆவணங்கள் அடிப்படையிலுமே செயற்பட்டு வருகிறது. 

நாங்கள் நீதிமன்றத்துக்கு தேவையான கடதாசி வெளியில் இருந்தே பெற்றுக்கொள்கிறோம்., டோனர் கருவி, நகழ் பத்திரம், அச்சு இயந்திரங்கள்,ஸ்கேனர்,  ஆவணங்களுக்கான உரை, களஞ்சியப்படுத்துவதற்கான இடவசதி இவை அனைத்தும் நீதிமன்றத்துக்குரிய வளங்களாகும். வழங்கு விசாரணைகள் முடிவடைந்த பின்னர், இந்த அனைத்து வளங்களும் வீணாகின்றன.

8ஆயிரம் பக்கங்களைக்கொண்ட வழக்கு ஆவணம் ஒன்றுக்காக, ஒரு தரப்புக்கு அதனை நகழ் அச்சிடுவதற்காக ஒருலட்சத்தி 25ஆயிரம் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக கடந்த தினம் ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவர் என்னிடம் சொன்னார்.அந்த வழக்கின் ஆவணங்களுக்கான மொத்த செலவு 3மில்லியனுக்கும் அதிகம் செலவாகி இருக்கிறது.

ஆனால் 35ஆயிரம்  ரூபா அளவில் கணணி ஒன்றை கொள்வனவு செய்திருந்தால், இந்தளவு செலவாகி இருக்காது. கணணிக்கு ஸ்கேன் செய்துகொண்டால், உங்களுக்கு தேவையான அளவு பிரதிகளை மீள அமைத்துக்கொள்ள முடியும்.இவ்வாறான செலவுகள் காரணமாக அதிகமானவர்கள் வழக்கு தொடுக்க பின்வாங்குகின்றனர்.இந்த முறைமையின் பிரகாரம் நிதி பின்புலத்துக்கும் நன்மையாகின்றதுடன் அதிகமானவர்களுக்கு வழக்கு தொடுப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்கிறது.

அதனால் அனைத்தையும் ஒரு கூரையின் கீழ் டிஜிட்டல் மயப்படுத்துவதே எமது நோக்கமாகும். இந்த வேலைத்திட்டத்துக்காக அரசாங்கம் நிதி ஒதுக்குவதற்கு இணக்கம் தெரிவித்திருக்கிறது.அதனால் இந்த காலாண்டில் குறைந்தபட்சம் 50 அல்லது 60 நீதிமன்றங்களை டிஜிட்டல் மயப்படுத்துவதுடன் என்ஞிய நீதிமன்றங்களை அடுத்தவருடம் டிஜிட்டல் மயப்படுத்துவோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-12-17 06:13:15
news-image

யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது!

2025-12-17 01:32:44
news-image

யாழில் மாடியில் இருந்து விழுந்த குடும்பஸ்தர்...

2025-12-17 01:29:18
news-image

பாராளுமன்ற தெரிவுக்குழு அமைப்பதை விட, நீதிமன்றம்...

2025-12-17 01:03:01
news-image

அனர்த்தத்தின் பின்னரான நிவாரண வழங்கல் மற்றும்...

2025-12-17 00:59:49
news-image

'இலங்கையை மீளக்கட்டியெழுப்பல்' நிதியம் பற்றி மேல்மாகாண...

2025-12-17 00:52:57
news-image

எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் பொருளாதார நெருக்கடி...

2025-12-16 15:48:49
news-image

நெருக்கடியான நிலையை அரசியல் இலாபத்துக்கு பயன்படுத்த...

2025-12-16 16:45:04
news-image

குறைநிரப்பு பிரேரணையை நிறைவேற்றிக் கொள்ள விசேட...

2025-12-16 22:09:31
news-image

அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்டும் எமது குரலை...

2025-12-16 17:18:15
news-image

சமஷ்டி அரசியலமைப்பு உருவாக்கத்துக்கு அழுத்தம் வழங்குங்கள்...

2025-12-16 17:03:11
news-image

அசோக ரன்வல தொடர்பில் கட்சி என்ற...

2025-12-16 17:17:30