சர்க்கரை நோய்க்கும், இதய பாதிப்பிற்கும் உள்ள தொடர்பு என்ன?

28 Oct, 2025 | 05:08 PM
image

எம்முடைய இரத்த சர்க்கரையின் அளவை எப்போதும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். இதனை மேற்கொள்ள தவறினால் இதயம் , கண்கள், சிறுநீரகம், பாதம்... போன்ற பல்வேறு உறுப்புகளில் கடுமையான பாதிப்பு ஏற்படக்கூடும்.

குறிப்பாக இரத்த சர்க்கரையின் அளவை அதற்குரிய சிகிச்சை மூலம் கட்டுப்படுத்தவில்லை என்றால்.. இதயம் பாதிப்பு ஏற்படக்கூடும். குறிப்பாக இதயத்துடிப்பு - இதய ரத்த நாளங்கள் - ஆகிய பகுதிகளில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தி, உயிருக்கு அச்சுறுத்தலையும் உண்டாக்கும் என வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

எம்முடைய உடலில் உள்ள ரத்த நாளங்களில் குருதியானது நீர்மை தன்மையுடன் பயணிக்கும். இதற்கு ரத்த நாளங்களின் உள் சுவற்றில் அமையப்பெற்றிருக்கும் எண்டோத்திலியம் காரணமாக உள்ளது.

இந்தத் தருணத்தில் நோயாளிகள் ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தவில்லை என்றால் ...அவை எண்டோதிலியத்தை பாதிக்கிறது.

இதனால் ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் இயல்பான அளவில் பயணிக்காமல் தடை படுகிறது. மேலும் ரத்த நாளங்களில் ரத்த உறைவு பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது.

சர்க்கரை நோயாளிகளின் உடல் எடை திடீரென்று குறைய தொடங்கும். இதன் எதிரொலியாக இதயத்தில் உள்ள ரத்தநாளங்களிலும் அதனுடைய செயல்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்தும். இதனை மருத்துவ மொழியில் டயபெடிக் கார்டியோமயோபதி என குறிப்பிடுவார்கள்.

இதுபோன்ற தருணங்களில் சர்க்கரை நோயாளிகளுக்கு அவர்களின் இதயத்தில் உள்ள ரத்த நாளங்களில் அடைப்பு பாதிப்பு ஏதும் ஏற்படாமல்... ரத்த நாளங்களின் அளவில் மாற்றம் ஏற்பட்டிருக்கும்.

அதனிடையே குருதி ஓட்டத்திலும் மாற்றம் உண்டாகி இருக்கும். இதனால் அவர்களுடைய இதயத்துடிப்பும் இயல்பான அளவை விட சற்று தாழ் நிலையில் சென்று விடும். சிலருக்கு இத்தகைய தருணத்தில் ரத்த அழுத்த பாதிப்பும் சம சீரற்ற நிலையில் உண்டாகி, இதய பாதிப்பை அதிகப்படுத்தி விடும்.

இந்த காரணங்களால் இதய பாதிப்பு ஏற்பட்ட நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை அளவு குறித்த பரிசோதனையும் மேற்கொண்டு இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்கான பிரத்யேக மருந்துகளும், சிகிச்சையும் நிவாரணமாக வழங்கப்படுகிறது.

வைத்தியர் சுந்தர் தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிராடிகினீசியா எனும் மெதுவான இயக்கம் -...

2025-11-10 18:24:20
news-image

பாலிட்ராமா எனும் பாதிப்பிற்குரிய நவீன ஒருங்கிணைப்பு...

2025-11-08 18:11:27
news-image

குறை மாதத்தில் பிறக்கும் பிள்ளையை பாதுகாப்பாக...

2025-11-07 18:22:58
news-image

குறட்டை விடுவதற்கு உடல் எடை அதிகம்...

2025-11-06 16:55:26
news-image

டைப் 2 சர்க்கரை நோய் பாதிப்பிற்கான...

2025-11-04 18:18:49
news-image

மாரடைப்பு பாதிப்பு ஏற்படுமா? என்பதனை அறிய...

2025-11-03 17:30:29
news-image

முதுகெலும்பு பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2025-11-01 15:03:10
news-image

செயன்முறை கருத்தரிப்பு சிகிச்சையில் அறிமுகமாகி இருக்கும்...

2025-10-31 18:09:47
news-image

இதய செயலிழப்பு நோயாளிகளுக்கு தண்ணீர் பருகுவதில்...

2025-10-30 18:09:24
news-image

எண்டோமெட்ரியோசிஸ் எனும் கருப்பையகப் பாதிப்பிற்குரிய அறிகுறிகள்...

2025-10-29 18:16:57
news-image

சர்க்கரை நோய்க்கும், இதய பாதிப்பிற்கும் உள்ள...

2025-10-28 17:08:30
news-image

லிம்போபுரோலிஃபெரேடிவ் டிஸார்டர் எனும் நிணநீர் மண்டல...

2025-10-27 15:17:25