விவரிக்க இயலாத அல்லது பகிர்ந்து கொள்ள இயலாத பல காரணங்களால் திருமணமான பல பெண்மணிகள் கணவனை இழந்து கைம்பெண்ணாக மாறிவிடுவார்கள். இதில் சிலருக்கு பிள்ளைகளும் இருக்கும்.
இவர்களுக்கு மறுமணம் செய்து வைக்க அவருடைய பெற்றோர்களோ... தோழிகளோ.. நலம் விரும்பிகளோ விரும்பினாலும் ... இவர்களால் மனதளவில் மற்றொரு வாழ்க்கை குறித்த எண்ணத்தை வெளிப்படுத்த மாட்டார்கள்.
இந்த தருணத்தில் சமூக பாதுகாப்பு- பிள்ளைகளின் எதிர்காலம் மற்றும் தங்களுடைய உடல் மற்றும் உளவியல் நலம் குறித்த அக்கறையின் காரணமாக மற்றொரு துணையை விரும்பினால்... அதற்கும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் சூட்சமமான குறிப்பினை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இதுபோன்ற நிலையில் இருக்கும் விதவைகள் - அருகில் இருக்கும் ஆலயத்தில் உழவாரப்பணி மேற்கொண்டால் ஓராண்டுக்குள் அவர்களுடைய வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படும்.
அதிலும் குறிப்பாக ஆலய நுழைவு வாயில் - துர்க்கை அம்மன் சன்னதி- அம்பாள் சன்னதி- தீபமேற்றுமிடம் - ஆகியவற்றை இவர்கள் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் நம்பிக்கையுடன் உழவாரப்பணி செய்து தூய்மையாக பராமரித்து வரவேண்டும் . இதனை தொடர்ந்து செய்தால் பிரபஞ்சம் இவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய பாக்கியத்தை அளிக்கும்.
தொகுப்பு: சுபயோக தாசன்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM