சிங்கரிடமிருந்து புதிய HONOR Magic V5 Foldable ஸ்மார்ட்ஃபோன் அறிமுகம்

28 Oct, 2025 | 03:17 PM
image

சிங்கர் ஸ்ரீ லங்கா பிஎல்சி, புதிய HONOR Magic V5 foldable ஸ்மார்ட்ஃபோனை அறிமுகம் செய்து, உயர்தர ஸ்மார்ட்ஃபோன் அனுபவத்தை மேம்படுத்தி மாற்றியமைத்துள்ளது. கலைத்திறன், நுண்ணறிவு மற்றும் செயல்பாட்டுத் திறன் ஆகியவற்றை ஒன்றிணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மாதிரி, புதியதொரு சகாப்தத்தின் பயணமாக அறிமுகமாகிறது. இது பாவனையாளர்களுக்கு இதுவரை காலமும் கிடைத்திராத, செயல்திறனையும் படைப்பாற்றலையும் கொண்டுவர உதவுகிறது.

HONOR Magic V5 இல் கண்கவர் வடிவமைப்பு மற்றும் தொழில்னுட்ப சிறப்பு ஆகியன அடங்கியிருப்பதுடன், unfold செய்திருக்கையில் 4.2 mm அடர்த்தியை மாத்திரம் கொண்டிருப்பதுடன், 217g எனும் எளிமையான எடையையும் கொண்டது. இதுவரை தயாரிக்கப்பட்ட fold செய்யக்கூடிய ஸ்மார்ட்ஃபோன்களில் slim ஆன மற்றும் எளிதில் கொண்டு செல்லக்கூடியதாக அமைந்துள்ளது.

இந்த சாதனம் dual HDR display ஐ கொண்டுள்ளதுடன், 5000 nits எனும் peak brightness ஐ கொண்டிருப்பதால், தெளிவான காட்சியமைப்பை வழங்குகிறது. இரு திரைகளிலும் pen ஐ பயன்படுத்த முடிவதுடன், வரைதல், குறிப்பெடுத்தல் அல்லது பலதரப்பட்ட பணிகளை மேற்கொள்ள எதிர்பார்ப்பவர்களுக்கு இந்த இரட்டை high-definition திரை ஒப்பற்ற அனுபவத்தை வழங்குவதாக அமைந்திருக்கும்.

சிங்கர் ஸ்ரீ லங்காவின் குழும முகாமைத்துவ பணிப்பாளர் மஹேஷ் விஜேவர்தன கருத்துத் தெரிவிக்கையில், “HONOR Magic V5 சாதனத்தை அறிமுகம் செய்வதில் நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். புத்தாக்கம் மற்றும் வடிவமைப்புத்திறன் ஆகியவற்றை ஒன்றிணைத்ததாக இந்த சாதனம் அமைந்துள்ளது.

இந்த fold செய்யக்கூடிய ஸ்மார்ட்ஃபோன் ஊடாக, உலகத்தரம் வாய்ந்த தொழில்னுட்பத்தை இலங்கையின் நுகர்வோருக்கு கொண்டு வருவதில் நாம் கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பு பிரதிபலிக்கப்பட்டுள்ளதுடன், உயர்ந்த வினைத்திறனை பெற்றுக் கொடுப்பது மட்டுமன்றி, சிறந்த எதிர்கால மொபைல் அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுப்பதையும் காண்பிக்கிறது.” என்றார்.

தெற்காசிய பிராந்தியத்திற்கான HONOR இன் தலைவர் ஜோர்ஜ் செங்க் கருத்துத் தெரிவிக்கையில், “வடிவமைப்பு மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றில் HONOR இன் தலைமைத்துவத்திற்கான எடுத்துக்காட்டாக Magic V5 அமைந்துள்ளது. சிங்கருடனான எமது பங்காண்மையினூடாக, இந்த அதிசிறந்த சாதனத்தை இலங்கையில் அறிமுகம் செய்வதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம். அதன் fold செய்யக்கூடிய தன்மை, AI ஆற்றல்கள் மற்றும் ecosystem இணைப்புத்திறன் போன்றன, பாவனையாளர்களுக்கு முன்னணி ஸ்மார்ட்ஃபோன் ஒன்றிலிருந்து எதிர்பார்க்கக்கூடிய புதிய நியமத்தை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.” என்றார்.

தொலைபேசியின் உண்மையான வலு, அதன் மதினுட்பமான AI-driven அனுபவத்தில் அடங்கியுள்ளது. அதன் split-screen AI assistant ஊடாக, இணையதள சந்திப்புகளில் பாவனை முதல் பங்கேற்பது வரை, பாவனையாளர்களுக்கு இரு திரைகளிலும் பல செயற்பாடுகளை ஒப்பற்ற வகையில் மேற்கொள்ள முடியும். அனைத்தும் ஸ்மார்ட்டான ஏற்பாடு மற்றும் மிருதுவான வினைத்திறன் போன்றவற்றினால் மேம்படுத்தப்பட்டுள்ளன.

தொலைபேசியின் கெமரா கட்டமைப்பு என்பதும் உயர் திறன் கொண்டதாக அமைந்துள்ளது, பிரதான கெமரா 64MP Ultra Sensing Periscope Telephoto திறன் கொண்டதாக அமைந்துள்ளதுடன், நுணுக்கமான காட்சியம்சங்கள் மற்றும் பரந்த வர்ணங்களை குறைந்த வெளிச்சத்திலும் தெளிவாக எடுக்கும் வகையில் அமைந்துள்ளது.

HONORஇன் மேம்படுத்தப்பட்ட image processing தொழில்னுட்பத்துடன், HONOR Magic V5 இனால் நிபுணத்துவ தர புகைப்படமெடுத்தல் மற்றும் வீடியோ எடுத்தல் போன்றன மேற்கொள்ளப்படுவதுடன், அவை உயர் தரத்திலானவையாக அமைந்திருக்கும்.

HONOR Magic V5 இன் அறிமுகம் இரு வர்த்தக நாமங்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்லை குறித்துள்ளது. புத்தாக்கம் மற்றும் சிறப்பு ஆகியவற்றுக்காக அவற்றின் பகிரப்பட்ட அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. fold செய்யும் தொழில்னுட்பத்தில் நுகர்வோரின் ஈடுபாடு அதிகரிக்கும் நிலையில், சிங்கர் மற்றும் HONOR இடையேயான கைகோர்ப்பு என்பது இலங்கையின் பாவனையாளர்களுக்கு உயர்தர புத்தாக்கங்களை அணுகுவதற்கான அவர்களின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளது.

HONOR Magic V5 இன் விலை ரூ. 599,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், தற்போது Reddish Brown மற்றும் Dawn Gold ஆகிய வர்ணங்களில் சிங்கர் காட்சியறைகள், நாடு முழுவதையும் சேர்ந்த அங்கீகாரம் பெற்ற மீள் விற்பனையாளர்கள் மற்றும் www.singer.lk ஒன்லைன் ஊடாகவும் கொள்வனவு செய்ய முடியும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

NBEA 2026 இல் ஒட்டுமொத்த சிறப்புக்கான...

2026-08-14 12:00:47
news-image

இலங்கையின் முன்னணி உணவுத் துறை கண்காட்சியான...

2026-08-14 10:51:37
news-image

RCGC இல் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக...

2026-08-13 17:43:14
news-image

2027 தேசிய வரவுசெலவுத் திட்டத்திற்கு முன்னதாக...

2026-08-09 17:16:46
news-image

காலியில் தனது புதிய மாபெரும் காட்சியறை...

2026-08-07 16:09:58
news-image

GSP+ மறுவிண்ணப்பம் நெருங்குகிறது: இலங்கையின் ஆடைத்...

2026-08-05 16:33:53
news-image

கிரிக்கெட் திறமைகளையும் சாதனையாளர்களையும் கௌரவிக்கும் 'Dialog...

2026-08-04 17:03:02
news-image

இலங்கையில் மின்சார வாகன சார்ஜிங் உட்கட்டமைப்பை...

2026-08-03 14:55:49
news-image

ஆடம்பரம், பொழுதுபோக்கு மற்றும் சர்வதேச அங்கீகாரத்தை...

2026-08-03 14:46:29
news-image

வளர்ச்சிக்கு முன்னுரிமை: சிலோன் மோட்டார் வாகன...

2026-08-02 14:27:26
news-image

2026ஆம் ஆண்டின் இலங்கையின் மிகவும் மதிப்புமிக்க...

2026-07-30 19:23:39
news-image

சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் NÜWA...

2026-07-20 15:08:44