தடுத்து வைக்கப்பட்டுள்ள குர்ஆன் பிரதிகளை விடுவிக்க காதர் மஸ்தான் எம்.பி. நடவடிக்கை

28 Oct, 2025 | 02:56 PM
image

சவூதி அரேபியாவிலிருந்து அனுப்பப்பட்டு மிகநீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள புனித அல் குர்ஆன் பிரதிகளை விடுவிப்பதற்காக ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.

கடந்த 2024 மே மாதம் 16ஆம் திகதி சவூதி அரேபியாவின் மன்னர் பஹத் புனித அல்குர் ஆன் அச்சிடல் பணியகத்திலிருந்து இலங்கையில் வதியும் முஸ்லிம்களின் சன்மார்க்க பணிகளுக்காக தமிழ் மொழிபெயர்ப்புடன்  அனுப்பப்பட்ட புனித அல்குர்ஆனின் பிரதிகள் அடங்கிய கொள்கலன் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி இலங்கை சுங்கத்  திணைக்களத்தால்  தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் இது தொடர்பில் அண்மையில் பாராளுமன்றத்தில் காத்திரமான உரையொன்றை ஆற்றியிருந்ததுடன் இவ்விடயம் தொடர்பில் முஸ்லிம்  பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை கூட்டமொன்றையும்  நடத்தி அவர்கள் அனைவரின் கையொப்பங்களையும் பெற்று கடிதமொன்றை  கடந்த வாரம் புத்தசாசன மற்றும்  சமய, கலாசார அமைச்சரிடம்  கையளித்துள்ளார்.

அக்கடிதத்தில் மேற்படி அல்குர்ஆன் பிரதிகளில் எந்த வித மாறுதலும் இல்லாமல் அதன் புனிதத்தன்மை பேணப்பட்டு சவூதி அரசாங்கத்தால் உறுதிப்படுத்தப்பட்ட விடயத்தையும் சுட்டிக்  காட்டியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுர அரசின் செயற்பாடுகளுக்கு மக்கள் திருப்தி;...

2026-07-16 00:11:56
news-image

வெலிக்கடை சிறைக்கு மாற்றப்பட்ட கைதிகள் மீது...

2026-07-15 15:41:12
news-image

சிறைச்சாலை அதிகாரிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதா?...

2026-07-15 14:21:29
news-image

திருடர்களால் அரசாங்கத்தை ஆக்கிரமிக்க முடியாமல், எதிர்க்கட்சியைப்...

2026-07-15 14:11:31
news-image

ஆளுநர்களைத் தொடர்ந்து பிரதமரும் இராஜினாமா செய்வாரா?...

2026-07-15 14:28:40
news-image

நீதித்துறையில் கை வைக்காமல் நிறைவேற்று அதிகாரமிக்க...

2026-07-15 15:17:17
news-image

விவசாய சமூகத்தை பாதுகாக்கத் தவறினால், தேசத்தினது...

2026-07-15 15:04:25
news-image

அநுர அரசாங்கம் நாசிசத்தை நோக்கி நகர்கிறது...

2026-07-15 14:04:14
news-image

அரசியல் ஒடுக்குமுறைக்கு நீதித்துறையை பயன்படுத்தினால் மக்கள்...

2026-07-15 19:30:32
news-image

நீதியை நிலைநாட்டுவதில் இலங்கை அரசாங்கங்கள் அடைந்திருக்கும்...

2026-07-15 19:29:50
news-image

சிறைச்சாலையில் உயிரிழந்தவர்கள் அனைவரதும் வாழும் உரிமை...

2026-07-15 19:31:02
news-image

ஏழை தொழிலாளர்களை அழித்து வெளிநாட்டு ஊழியர்களை...

2026-07-15 19:31:37