மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள்மடம் ஸ்ரீல ஸ்ரீசெல்லக் கதிர்காம சுவாமி ஆலயத்தில் பக்தி பூர்வமாக சூரசம்காரம் நடைபெற்றது.
கடந்த 22 ம் திகதி ஆரம்பமாகிய கந்தசஷ்டி விரத வழிபாடுகளின் ஆறாம் நாள் திங்கட்கிழமை (27) சூரசம்காரம் பக்தி பூர்வமாக நடைபெற்றது.
ஆலயத்தில் இடம்பெற்ற விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பமாகி, முருகப்பெருமானுக்கு விசேட அபிசேகம் இடம்பெற்று , வசந்த மண்டப பூஜையை தொடர்ந்து, உள் வீதி வலம் இடம்பெற்று , வெளிவீதியில் பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் புடை சூழ அரோகரா கோசங்கள் முழங்க சூரசம்காரம் நடைபெற்றது.
முருகப்பெருமான் சூரபத்மனை அழித்த இதிகாச கதைகளுடன் தொடர்புடையதாக அதனை நினைவுப்படுத்தும் வகையில் சூரசம்காரம் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இக் கிரியை வழிபாடுகள் யாவும் ஆலயம் பிரதம குரு சிவ ஸ்ரீ நவரெத்தினமுரசொலிமாறன் குருக்கள் தலைமையிலான குருமார் குழுவினால் நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM