நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவின் பொதுசன தொடர்புகள் அதிகாரி சமீர மனஹர பதவி விலகுவதாக அமைச்சருக்கு இராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார்.

போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடைந்து தான் குற்றமிளைக்காதவர் என நிரூபனமாகும் வரை தான் வகிக்கும் பொதுசன அதிகாரி பதவியை இராஜினாமா செய்வதாக தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் போதைப்பொருள் குற்றச்சாட்டு தன் மீது சுமத்தப்பட்டு கைது செய்துள்ளமையானது அரசியல் சூழ்ச்சி எனவும் குறிப்பிட்டுள்ளார்.