வவுனியாவில் சட்ட விரோத சொத்து சேர்ப்பு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

28 Oct, 2025 | 11:45 AM
image

வவுனியாவில் சட்ட விரோதமான முறையில் சொத்து சேர்த்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சட்டவிரோதமான முறையில் சொத்து சேர்த்தவர்கள் தொடர்பில் விசாரணை செய்ய பொலிசாரின் விசேட பிரிவு ஒன்று அண்மையில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அந்த பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து யாழ்ப்பாணத்தில் பலருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வவுனியாவிலும் மீற்றர் வட்டி மற்றும் போதைப் பொருள் விற்பனை, மக்களிடம் அதிகமான காசோலைகளை பெற்றுக் கொண்டு அதை அடிப்படையாகக் கொண்டு மிரட்டப்பட்டு சொத்துக்களை பெற்றமை, மோசடியான முறையில் காணிகளை அபகரித்து சொத்து சேர்த்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

இது தொடர்பில் பொலிஸார் சிலரிடம் வாக்கு மூலங்களைப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது

இதேவேளை, வவுனியாவில் அதிகரித்து வரும் மீற்றர் வட்டி மற்றும் போதைப் பொருள் மாபியாவுக்கு எதிராக மக்கள் தகவல்களை எமக்கோ அல்லது பொலிஸாருக்கோ வழங்கினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாடளாவிய ரீதியில் சுமார் 15,000 மண்சரிவு...

2025-12-09 16:59:03
news-image

அவசரகாலநிலைப் பிரகடனத்தின்கீழ் பரந்துபட்ட அவசரகால விதிகள்...

2025-12-09 20:25:08
news-image

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை மறுசீரமையுங்கள்...

2025-12-09 20:23:52
news-image

நிவாரணம் வழங்குவதில் அரசியல் அழுத்தம் -...

2025-12-09 17:07:45
news-image

பண்டத்தரிப்பில் தூண்டிலில் மீன் பிடித்த இளைஞர்...

2025-12-09 23:04:12
news-image

பண்டாரவன்னி கிராம மக்களுக்கான அவசர அறிவிப்பு!

2025-12-09 22:54:05
news-image

மக்களின் வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கான பணிகள் நடைபெற்று...

2025-12-09 20:24:19
news-image

அழிவினால் ஏற்பட்ட இழப்புக்களை அரசாங்கம் முறையாக...

2025-12-09 20:25:42
news-image

200 வருடங்களாக மலையக மக்கள் வாழ...

2025-12-09 20:27:39
news-image

தண்ணிமுறிப்பு குளத்தின் கீழ்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு...

2025-12-09 22:18:49
news-image

முள்ளியவளை – நெடுங்கேணி வீதியால்  பயணிக்கும்...

2025-12-09 22:17:16
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Anunine...

2025-12-09 22:07:52