“சுத்தமான இன்று – பசுமையான நாளை” என்ற சூழல்நல முன்முயற்சியில் இலங்கை விமானப்படையுடன் கூட்டுச்சேர்ந்துள்ள எயிற்கின் ஸ்பென்ஸ்

28 Oct, 2025 | 03:06 PM
image

உலக சுற்றுச்சூழல் தினத்தைக் குறிக்கும் வகையில் விமானப் படையின் சேவா வனிதா பிரிவினால் ஆரம்பிக்கப்பட்ட “சுத்தமான இன்று – பசுமையான நாளை” (Clean Today – Green Tomorrow ) என்ற சூழல்நல முன்முயற்சியில் எயிற்கின் ஸ்பென்ஸ் பி.எல்.சி. (Aitken Spence PLC) இலங்கை விமானப்படையுடன் கூட்டுச்சேர்ந்துள்ளது.

இத் திட்டம் அறிவூட்டல், வெளிப்பாட்டை ஊக்குவித்தல், சுற்றுச்சூழல் பொறுப்பு வாய்ந்த செயற்பாடுகளின் நடைமுறைப் பயன்பாட்டை எளிதாக்குதல் ஆகியவற்றின் மூலம் விமானப்படை முகாம்கள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள சமூகங்களில் பேண்தகு தன்மையை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டதாகும்.

எயிற்கின் ஸ்பென்ஸை பொறுத்தவரை, பேண்தகு தன்மை அதன் அடையாளத்தின் மையத்தில் உள்ளது. சூழலுக்கு நலமான விருந்தோம்பலில் ஓர் உலகளாவிய அளவுகோலாக அங்கீகரிக்கப்படும் ஹெரிட்டன்ஸ் கந்தலம ( Heritance Kandalama) முதல் பேண்தகு விவசாய முறையில் வழிநடத்தப்படும் அதன் தோட்டங்கள் வரை, எயிற்கின் ஸ்பென்ஸ் குழுமம் நீண்டகாலமாகவே சுற்றுச்சூழல் மேலாண்மையை ஆதரித்து வருகின்றது.

இந்த ஒத்துழைப்பின் மூலம் எயிற்கின் ஸ்பென்ஸ் அதன் வணிக நடவடிக்கைகளுக்குள் பேண்தகு தன்மையின் நிரூபிக்கப்பட்ட மாதிரிகளை வெளிப்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழல் உணர்வுள்ள சமூகங்களின் புதிய தலைமுறையை ஊக்குவிக்க முயல்கின்றது. பங்கேற்பாளர்கள் தமது முகாம்களுக்குள்ளும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பேண்தகு தன்மையான நடைமுறைகளை ஒருங்கிணைப்பதற்கு ஊக்குவித்த நிபுணத்துவ நுண்ணறிவுகளினால், வெளிப்படையாகப் புலப்படும் மற்றும் திரைக்குப் பின்னாலுள்ள வெளிப்பாட்டைப் பெற்றனர்.

இப் பங்காளித்துவம், ஐக்கிய நாடுகளின் பல்வேறு பேண்தகு அபிவிருத்தி இலக்குகள் (SDGs ) மற்றும் தேசிய அபிவிருத்தி முன்னுரிமைகளுடன் குழுமத்தின் சீரமைப்பை வலுப்படுத்துகின்றது. இந்த முன்முயற்சி, பேண்தகு அபிவிருத்தியை முன்னெடுப்பதற்குத் தேவையான அறிவு மற்றும் திறன்களை கற்பவர்களுக்கு வழங்குவதன் மூலம் தரச்சிறப்பான கல்வியை (SDG 4 ) ஆதரிக்கின்றது. அதே சமயத்தில், செயற்பாட்டு நடைமுறைகளில் புதுமையான தொழில்நுட்பங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் தொழிற்றுறை, புத்தாக்கம், உட்கட்டமைப்பு வசதிகள் (SDG 9) ஆகியவற்றை இது ஊக்குவிக்கின்றது.

கழிவுகளின் குறைப்பையும் மூலவளங்களின் செயற்றிறனையும் ஊக்குவிப்பதன் மூலம் பொறுப்பு வாய்ந்த நுகர்வு மற்றும் உற்பத்திக்கு (SDG 12) இது பங்களிக்கின்றது. மேலும், சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாக்கும் மற்றும் பொறுப்பு வாய்ந்த நிலப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் பேண்தகு விவசாய நடைமுறைகள் மூலம் பூமியில் வாழ்க்கையை (SDG 15) அது மேம்படுத்துகின்றது. இந்த ஒத்துழைப்பு. பேண்தகு தன்மையான முன்னேற்றத்தை உந்துவதில் கூட்டு முயற்சிகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதன் மூலம் இலக்குகளுக்கான பங்காளித்துவத்திற்கு (SDG 17) முன்னுதாரணமாக விளங்குகின்றது.

பங்காளித்துவத்தின் ஒரு பகுதி என்ற முறையில், பேண்தகு செயற்பாடுகள் குறித்த நேரடி வெளிப்பாட்டைப் பெறுவதற்காக, எயிற்கின் ஸ்பென்ஸ் ஹொட்டேல்கள் மற்றும் எயிற்கின் ஸ்பென்ஸ் பிளான்டோ~ன்ஸ் ஆகியவற்றினால் அழைக்கப்பட்ட விமானப்படை பிரதிநிதிகள் ஹெரிட்டன்ஸ் கந்தலமவிற்கு விஜயம் செய்தனர். அங்கே கழிவுப்பொருள் முகாமைத்துவம், நீர் மற்றும் எரிசக்தியின் சிக்கனமான பாவனை மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்புணர்வு வாய்ந்த விருந்தோம்பல் என்பன தொடர்பாக முன்னோடி முயற்சிகளை அவர்கள் அவதானித்தனர்.

எயிற்கின் ஸ்பென்ஸ் பிளான்டே~ன்ஸினால் நிர்வகிக்கப்படும் நியூ பீக்கொக் (New Peacock), தன்சினேன் (Dunsinane) மற்றும் மெத்தகோம்ப்ரா (Meddecombra) மற்றும் எஸ்டேட்களுக்கு விமானப்படை பிரதிநிதிகளின் இரண்டாவது விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சி பங்கேற்பாளர்களுக்கு புவியியல் தகவல் அமைப்பு ( GIS ) மெப்பிங், ட்ரோன் பயன்பாடுகள், இழைய விருத்தி முறைகள், தேயிலை உற்பத்தியில் இயந்திரமயமாக்கல் மற்றும் சமூகம் சார்ந்த முயற்சிகள் உள்ளிட்ட பேண்தகு தோட்டச் செய்கை நடைமுறைகளை அறிமுகப்படுத்தியது. முதியோர் இல்லம் ஒன்றிற்கான விஜயத்துடன் இது முடிவடைந்தது. இந்த அனுபவங்களினால் ஈர்க்கப்பட்டு, பல விமானப்படை முகாமகள் ஏற்கனவே சக்தி சேமிப்புத் திட்டங்களை ஆரம்பிப்பதில் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளன. 

இந்த முழுத் திட்டமும் 5 முதல் 6 மாதங்கள் வரை நீடிக்கும் என்பதுடன், வருட இறுதியில் விமானப்படை முகாம்களினால் மேற்கொள்ளப்பட்ட மிகச் சிறந்த சுற்றுச்சூழல் முயற்சிகளைப் பாராட்டுவதற்கான ஓர் அங்கீகார விழாவுடன் முடிவடையும். திறன் மேம்பாடு, மதிப்பீட்டில் பங்கேற்பது மற்றும் மிகவும் முன்மாதிரியான குழுக்களுக்கு விசேட அங்கீகார விருதுகளை வழங்குவதன் மூலம் எயிற்கின் ஸ்பென்ஸ் இத் திட்டத்தை ஆதரிக்கின்றது. இத்தகைய முயற்சிகளை ஆதரிப்பதன் மூலம், எயிற்கின் ஸ்பென்ஸ் இலங்கையில் பேண்தகு தன்மையின் ஒரு முன்னோடியாக தனது பங்கை மீண்டும் உறுதிப்படுத்துகின்றது.

நிறுவனத்தின் செயற்பாடுகளில்; பேண்தகு தன்மையை ஒரு முக்கிய அம்சமாக ஒருங்கிணைப்பதன் மூலம் எவ்வளவு அர்த்தமுள்ள சுற்றுச்சூழல் முன்னேற்றத்தை அடைய முடியும் என்பதை அது நிரூபிக்கின்றது. அதேயளவு முக்கியமாக, பேண்தகு நடைமுறைகள் குறித்து சமூகங்கள் மற்றும் பங்காளி அமைப்புகளுக்கு அறிவூட்டுவதிலும் நிறுவனம் உறுதிபூண்டுள்ளது. ஏனெனில், விழிப்புணர்வு மற்றும் பகிர்ந்துகொள்ளப்படும் பொறுப்புணர்வின் மூலமே நீடித்திருக்கும் மாற்றம் ஆரம்பமாகின்றது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

“2025 ஆம் ஆண்டின் இலங்கைக்கான சிறந்த...

2025-12-16 15:48:08
news-image

WealthTrust Securities ஆரம்ப பொதுப் பங்கு...

2025-12-16 14:40:36
news-image

சியபத பினான்ஸ் நிறுவனம், தனது 60வது...

2025-12-16 13:13:56
news-image

Google Wallet அறிமுகம்: Google Pay...

2025-12-16 10:33:57
news-image

SLIM தேசிய விற்பனை விருதுகள் 2025...

2025-12-15 14:04:46
news-image

தேசிய அட்டைகளை அறிமுகப்படுத்துவதற்காக மக்கள் வங்கி,...

2025-12-10 17:47:01
news-image

சூழல்நேயம்மிக்க போக்குவரத்திற்கு உதவும் முகமாக TAILG...

2025-12-10 12:40:01
news-image

இலங்கை காப்பீட்டு நிறுவனம் இலங்கை பார்...

2025-12-10 12:38:04
news-image

SLT குழுமம் 2025 ஆம் ஆண்டின்...

2025-12-10 09:58:31
news-image

மோரா ரேசிங்: இலங்கை மோட்டார்ஸ்போர்ட்டில் விரைவான...

2025-12-09 15:09:13
news-image

காகில்ஸ் 'கிராமத்திலிருந்து வீட்டுக்கு' செயற்திட்டம் கிராமிய...

2025-12-09 15:04:20
news-image

நிலைபேற்றியலுடனான முன்னேற்றப் பயணத்தை SDB வங்கி...

2025-12-09 12:09:15