மட்டக்களப்பு, ஈழத்து திருச்செந்தூர் ஆலய கந்தசஷ்டி விரதத்தின் சூரசம்ஹார நிகழ்வு

28 Oct, 2025 | 10:16 AM
image

கந்தசஷ்டி விரத்தின் மிக முக்கியத்துவமான நிகழ்வான சூரம்சம்ஹாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இந்து ஆலயங்களில் சூரசம்ஹார நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.

மட்டக்களப்பு,ஈழத்து திருச்செந்தூர் ஆலயத்தில் கந்தசஷ்டி விரதத்தின் சூரசம்ஹார நிகழ்வு திங்கட்கிழமை (27) மாலை சிற்ப்பாக நடைபெற்றது.

ஈழத்து திருச்செந்தூர் எனப்போற்றப்படும் மட்டக்களப்பு,திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் கந்த சஸ்டி விரதம் கடந்த 22ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பமானது. முருகப்பெருமானுக்கு விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் கந்தசஸ்டி விரதத்திற்கான கும்பம் வைக்கப்பட்டு விசேட பூஜைகள் நடைபெற்றுவந்தன.

ஐந்து தினங்கள் பக்தர்கள் விரதமிருந்து கந்தசஸ்டி விரதம் அனுஸ்டித்ததுடன் தினமும் ஆலயத்தில் கந்தபுராண படலம் பாடும் நிகழ்வும் நடைபெற்றது.

இன்று பிற்பகல் சூரசம்ஹாரத்திற்கான வேல் கல்லடி முத்துமாரியம்மன் ஆலயத்தில் பெற்றுக்கொண்டு வேல்படையானது ஆலயத்தினை ஊர்வலமாக வந்தடைந்து. அதனை தொடர்ந்து சூரனை வதம் செய்யும்போது நடைபெற்ற நிகழ்வுகளை வெளிப்படுத்தும் வகையில் சூரன்போர் நடாத்தப்பட்டது.

ஆலயத்தின் முருகப்பெருமானுக்கு விசேட பூஜைகள் நடைபெற்று பூதப்படை சூழ முருகப்பெருமான் ஊர்வலமாக சென்று சூரசம்ஹாரம் செய்யும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றதுடன் ஆலயத்திற்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மலையக ஐயப்ப சுவாமிமார்களின் விசா மற்றும்...

2026-11-14 09:49:11
news-image

ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில்...

2026-11-14 04:38:35
news-image

அனைத்து ஆத்துமாக்கள் தின திருப்பலி

2026-11-13 09:56:02
news-image

19ஆவது பிரவாசி பாரதிய திவாஸ் 2027...

2026-11-12 16:54:04
news-image

அட்டனில் இன்று அமரர் இர. சிவலிங்கத்தின்...

2026-11-12 14:02:51
news-image

கொழும்பு, கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய...

2026-11-08 16:38:22
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில்...

2026-11-08 16:32:19
news-image

ITEC முன்னாள் மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில்...

2026-11-07 13:55:40
news-image

நக்ஷ்பந்திய்யா தரீக்காவின் உலக ஆன்மிகத் தலைவர்...

2026-11-06 13:52:12
news-image

மலையக மகளிர் அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில்...

2026-11-06 13:16:16
news-image

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் பாடசாலையின்...

2026-11-04 09:31:25
news-image

கொழும்பு - ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய...

2026-11-03 14:04:32