(நா.தனுஜா)
1989 இல் தெற்கில் ஜே.வி.பி எழுச்சியின்போதும், ஏனைய சந்தர்ப்பங்களிலும் கொல்லப்பட்ட மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களை நினைவுகூரும் நிகழ்வு திங்கட்கிழமை (27) சீதுவ - ரத்தொலுகமவில் நடைபெற்றதுடன் அதனைத்தொடர்ந்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ஆகியோருக்கான மகஜர்களும் கையளிக்கப்பட்டன.
1989 ஆம் ஆண்டு ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி) எழுச்சியின்போது அதன் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பலர் கொல்லப்பட்டதுடன் மேலும் பலர் வலிந்து காணாமலாக்கப்பட்டனர். இச்சம்பவங்களுக்கு மத்தியில் 1989 ஆம் ஆண்டு சுதந்திர வர்த்தக வலய ஊழியரும், தொழிற்சங்கவாதியுமான எச்.எம்.ரஞ்சித் மற்றும் அவரது சட்டத்தரணி ஆகிய இருவர் கொல்லப்பட்டதன் பின்னர், அவர்களது உடல்கள் சீதுவ - ரத்தொலுகம பகுதியில் கண்டெடுக்கப்பட்டன.
அதனையடுத்து அவர்களை நினைவுகூரும் வகையில் ரத்தொலுகம சந்தியில் நிர்மாணிக்கப்பட்ட நினைவுத்தூபி, பின்னாளில் தெற்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரை நினைவுகூருவதற்கான நினைவுத்தூபியாக மாற்றமடைந்தது.
அதன்படி தெற்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி இயங்கிவரும் காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களின் பங்கேற்புடன் வருடாந்தம் ஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதி இத்தூபிக்கு அண்மையில் நினைவுகூரல் நிகழ்வு நடைபெறும்.
அதற்கமைய நேற்றைய தினம் மு.ப 10.00 - 11.15 மணி வரை ரத்தொலுகம சந்தியில் உள்ள வலிந்து காணாமலாக்கப்பட்டோர் நினைவுத்தூபிக்கு முன்பாக தெற்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் பங்கேற்புடன் நினைவுகூரல் நிகழ்வு நடைபெற்றது.
அதேவேளை இந்நினைவுகூரல் நிகழ்வில் பங்கேற்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அழைப்புவிடுத்திருந்த போதிலும், அக்கடிதத்துக்கு ஜனாதிபதி தரப்பிலிருந்து கிடைக்காததன் காரணமாக நேற்று பி.ப 2.00 மணியளவில் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகக்கூடி தமது அதிருப்தியை வெளிப்படுத்திய வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், ஜனாதிபதி செயலக அதிகாரிகளிடம் மகஜரொன்றையும் கையளித்தனர்.
அம்மகஜரில், தாம் ஏற்கனவே அனுப்பிவைத்த இரு கடிதங்களுக்கும் பதில் அளிக்காமை தொடர்பில் அதிருப்தியை வெளிப்படுத்தியிருப்பதுடன் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களைச் சந்திப்பதற்கு நேரமொன்றை ஒதுக்கித்தருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM