தமிழறிஞரும் யாழ். இந்து கல்லூரியின் முன்னாள் பிரதி அதிபருமாகிய கலாநிதி க. சிவராமலிங்கம்பிள்ளையின் நூற்றாண்டையொட்டி வட மாகாணப் பாடசாலைகளிடையே விவாதச் சுற்றுப்போட்டி ஒன்றை யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நடத்தவுள்ளது.
இப்போட்டியில் பங்குபற்றும் ஆர்வமுடைய பாடசாலைகள், போட்டியாளர் முழுப்பெயர், பொறுப்பாசியர் பெயர், தொலைபேசி இலக்கம் என்பவற்றைக் குறிப்பிட்டு தமது பாடசாலை அதிபரின் உறுதிப்படுத்தலுடன் எதிர்வரும் 08.11.2025இற்கு முன்னர் கிடைக்கக்கூடியதாக பொதுச் செயலாளர், யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம், இல 28, குமாரசாமி வீதி, கந்தர்மடம், யாழ்ப்பாணம் என்ற முகவரிக்கு விண்ணப்பிக்குமாறும் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கச் செயலாளர் கோரியுள்ளார்.
மேலதிக விபரங்கள் தேவைப்படுவோர் போட்டி இணைப்பாளர் தெ. ஹர்சனை 0759556041 / 0767556041 என்ற இலக்கத்தில் தொடர்பு கொள்ளலாம் எனவும் தேசிய மட்டத் தமிழ்த்தினப் போட்டிகளின் சுற்றுநிருபத்தைத் தழுவிய நிலையில் நவம்பர் மாத இறுதியில் போட்டிகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM