(நெவில் அன்தனி)
மலேசியாவின் தேசிய மகளிர் கிரிக்கெட் அணியினர் இலங்கைக்கு நாளைமறுதினம் 29ஆம் திகதி வருகை தரவுள்ளனர்.
இந்த விஜயத்தின்போது 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியினருடன் ஐந்து ரி20 கிரிக்கெட் போட்டிகளில் மலேசியா விளையாடவுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் பேரவையில் அங்கம் வகிக்கும் இணை உறுப்பு நாடுகளின் கிரிக்கெட் மேம்பாட்டுக்கு உதவும் நோக்கத்துடன் இந்தப் போட்டிகளை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
முதலாவது போட்டி என்சிசி மைதானத்தில் நவம்பர் 2ஆம் திகதியும் இரண்டாம், மூன்றாம் போட்டிகள் கோல்ட்ஸ் மைதானத்தில் நவம்பர் 3ஆம், 5ஆம் திகதிகளிலும் நான்காவது போட்டி என்சிசி மைதானத்தில் நவம்பர் 7ஆம் திகதியும் கடைசிப் போட்டி கோல்ட்ஸ் மைதானத்தில் நவம்பர் 10ஆம் திகதியும் நடைபெறும்.
இரண்டாவது போட்டி மாத்திரம் பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகும். மற்றைய போட்டிகள் யாவும் காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகும்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM