(இராஜதுரை ஹஷான்)
நாட்டு மக்கள் ஜனநாயக ரீதியில் அரசாங்கத்தை தெரிவு செய்துள்ளதால் அரச நிர்வாகத்தை நாங்கள் நெருக்கடிகுள்ளாக்கவில்லை. 5 வருட பதவி காலத்தை நிறைவு செய்தற்கு இடமளித்தோம். ஆனால் அரசாங்கம் பதவி காலத்தை நிறைவு செய்ய இடமளிப்பதற்கு நாட்டு மக்கள் தயார் நிலையில் இல்லை என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட தலைவர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
கொழும்பில் திங்கட்கிழமை (27) நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும், அவர் தலைமையிலான அரசாங்கத்துக்கும் எதிர்க்கட்சிகள் எவ்வித நெருக்கடியையும் ஏற்படுத்தவில்லை.
மக்கள் விடுதலை முன்னணியை போன்று நாங்கள் தொழிற்சங்கங்களை தூண்டிவிட்டு பணிப்புறக்கணிப்பு போராட்டங்களை மேற்கொள்ளவில்லை. வீதியில் இருந்து போராட்டம் செய்யவில்லை.
நாட்டு மக்கள் ஜனநாயக ரீதியில் அரசாங்கத்தை தெரிவு செய்துள்ளதால் அரச நிர்வாகத்தை நாங்கள் நெருக்குள்ளாக்கவில்லை. 5 வருட பதவி காலத்தை நிறைவு செய்தற்கு இடமளித்தோம்.ஆனால் அரசாங்கம் பதவி காலத்தை நிறைவு செய்ய இடமளிப்பதற்கு நாட்டு மக்கள் தயார் நிலையில் இல்லை.
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மக்கள் விடுதலை முன்னணி 75 ஆண்டுகால ஆட்சியை விமர்சித்து மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தினார்கள். இதன் விளைவை அரசாங்கம் இன்று எதிர்கொள்கிறது.
ஜனநாயக கட்டமைப்பில் இருந்துக்கொண்டு அரசாங்கம் சர்வாதிகாரத்தை கட்டவிழ்த்துள்ளது. அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளை அனைவரும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும்.அதற்கு அனைவரும் ஒன்றுப்பட வேண்டும் என்றார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM