வவுனியாவில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்து வவனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா இலங்கை போக்குவரத்து சபை  வீதிக்கு முன்பாக விமானநிலையத்திலிருந்து வவனியா நோக்கிச் சென்று கொண்டிருந்த வேன் மற்றும் வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி சென்றுக் கொண்டிருந்த லொறியுடன்  மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. 

விபத்தில் வாகன சாரதியாக சுவிஸ்நாட்டைந் சேர்ந்த காந்தன்  என்பவர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் படுகாயமடைந்த மூவரும் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

குறித்த விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.