காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பு தொகுத்து வழங்குகின்ற ''சிம்ப்ளி குஷ்பு' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிகர் மாதவனை பேட்டியெடுத்த குஷ்பு அவரிடம் முத்தம் பெற்றமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
'ஷீ தமிழ்' தொலைக்காட்சியில் எதிர்வரும் சனிக்கிழமை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள 'சிம்ப்ளி குஷ்பு' என்ற நேர்காணல் நிகழ்ச்சிக்கான விளம்பர வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
சபை நிறைந்த குறித்த நிகழ்ச்சியில், அலைபாயுதே திரைப்படத்தில் இடம்பெறும், வசனத்தை குஷ்புவை நோக்கி மாதவன். "குஷ்பு நான் உன்ன விரும்பல, உன்மேல ஆசப்படல, ஆனா அதெல்லாம் நடந்துருமோன்னு பயமா இருக்கு. யோசிச்சு சொல்லு" என்று பேசுகிறார். இதனை காதல் மனநிலையில் குஷ்பு ரசித்து கேட்பது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதைப்பார்த்து அரங்கத்திலுள்ள ரசிகர்கள் ஆரவாரத்தோடு ரசிப்பது போலவும் காட்டுகிறார்கள்.மேலும் குஷ்பு மாதவனிடம் முத்தம் பெறுகிறார் .
இந்த வீடியோவை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளதோடு அதில், உதடு, இதயம் போன்ற சின்னங்களை பதிவிட்டுள்ளார். மேலும், இந்த வீடியோவை பார்த்து பல பெண்கள், பொறாமைப்பட போகிறார்கள் என்றும் 'பெருமிதமாக தெரிவித்துள்ளார். இது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM