ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகும் 'காதல் ரீசெட் ரிப்பீட்'

27 Oct, 2025 | 03:30 PM
image

'அடியே' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் மதும்கேஷ் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'காதல் ரீசெட் ரிப்பீட்' என பெயரிடப்பட்டு, அதற்கான பிரத்யேக காணொளியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகும் 'காதல் ரீசெட் ரிப்பீட்' எனும் திரைப்படத்தில் மதும்கேஷ் , அர்ஜுன் அசோகன், ஜியோ சங்கர், எம். எஸ். பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். காதலை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் மற்றும் டி ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.

இப்படத்தின் டைட்டில் மற்றும் அறிமுக காணொளியை படக்குழுவினர் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வெளியிட்டு படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை தூண்டி இருக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right