எம்மில் சிலருக்கு இரவு நேரத்தில் வியர்வை வெளியாகும், சுவாசிப்பதில் தடுமாற்றம், அதீத சோர்வு, காய்ச்சல் ஆகியவையும் ஏற்படும். இத்தகைய அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக அருகில் இருக்கும் வைத்தியசாலைக்குச் சென்று பிரத்யேக வைத்திய நிபுணர்களை அணுகி ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும்.
ஏனெனில் இவை மருத்துவமொழியில் குறிப்பிடப்படும் லிம்போபுரோலிஃபெரேடிவ் டிஸார்டர் எனும் பாதிப்பாக இருக்கக்கூடும். இதற்கு தற்போது நவீன சிகிச்சைகள் மூலம் நிவாரணம் அளிக்கப்படுகிறது என வைத்தியர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இரவு நேரத்தில் இயல்பான அளவைவிட கூடுதலாக வியர்த்தல், மண்ணீரல் மற்றும் கல்லீரல் வீக்கம், கட்டுப்பாடற்ற ரத்தப்போக்கு, சோர்வு, காய்ச்சல், திடிரென்று எடை இழப்பு சுவாசத் திணறல், அடிக்கடி ஏற்படும் வைரஸ் தொற்று பாதிப்பு ஆகிய அறிகுறிகள் கொண்டதுதான் இந்த நிணநீர் மண்டல பாதிப்பு. இவர்களில் சிலருக்கு தோலில் ரத்த திட்டுக்கள் ஏற்படக்கூடும்.
மரபியல் காரணிகள்- எம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலமே தன்னிச்சையாக நிணநீர் மண்டலத்தை தாக்குதல்- சில நோய் எதிர்ப்பு மருந்துகளின் பக்க விளைவு- வைரஸ் தொற்று -என பல்வேறு காரணங்களால் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும்.
இதனை துல்லியமாக அவதானிக்க வைத்தியர்கள் குருதி பரிசோதனை, திசு பரிசோதனை, பெட் சிடி ஸ்கேன் போன்ற பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைப்பார்கள்.
இதன் அடிப்படையில் பாதிப்பின் தன்மை மற்றும் நிலை குறித்து உறுதிப்படுத்திக் கொண்ட பின் கீமோதெரபி, இம்யூனோதெரபி, ரேடியேசன் தெரபி, டார்கெட்டட் தெரபி ஆகிய சிகிச்சை முறைகளை பிரத்யேகமாகவோ... ஒருங்கிணைந்தோ... வழங்கி நிவாரணம் அளிப்பார்கள்.
வைத்தியர் பிரவீண் தொகுப்பு அனுஷா.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM