இன்றைய சூழலிலும் எம்முடைய பிள்ளைகளில் பலரும் உயர்கல்வி கற்று இலட்சங்களில் - மில்லியன்களில்- சம்பாதித்தாலும் திருமண வாழ்க்கையை பெற்றோர்கள் தான் அமைத்துத் தர வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.
அதற்கான முயற்சியில் பெற்றோர்கள் ஈடுபடும் போது சோதிட நிபுணர்கள் 'உங்களது பிள்ளைக்கு செவ்வாய் தோஷம் இருப்பதால் அதற்கான பரிகாரத்தை மேற்கொள்ள வேண்டும்' என பரிந்துரை செய்வார்கள்.
பெற்றோர்களும் சோதிட நிபுணர் பரிந்துரைத்த பரிகாரங்களை மேற்கொள்வார்கள். ஆனாலும் திருமண தொடர்பான விடயங்களில் தாமதமும், தடையும் தொடரக் கூடும்.
இந்நிலையில் இது தொடர்பான திருமண தடைகளை அகற்றுவதற்கு எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் சில சூட்சமமான குறிப்புகளை முன்மொழிந்திருக்கிறார்கள். அதனை தொடர்ந்து 48 நாட்கள் வரை பின்பற்றினால் சுப நிகழ்வு விரைவாக நடைபெறும்.
செவ்வாய் தோஷத்தால் திருமண தடையை எதிர்கொண்டிருக்கும் பிள்ளைகள்.. செங்கல் சூளையில் சில நாட்கள் ஊதியம் பெறாமல் சேவை நோக்கத்தில் பணியாற்றிட வேண்டும்.
குறிப்பாக செவ்வாய் கிழமையில் அவர்கள் காலை முதல் மாலை வரை பணியாற்றிட வேண்டும் . இதில் ஏதேனும் அசௌகரியங்கள் ஏற்படும் என்றால்... அருகில் யாரேனும் வீடு கட்டினால், அந்த வீடு கட்டுவதற்கு தேவையான செங்கல்லை சுமந்து, அங்கு பணிபுரியும் கட்டிட தொழிலாளிக்கு உதவிட வேண்டும்.
இதுபோன்ற வாழ்வியல் குறிப்புகளை 48 நாட்கள் வரை தொடர்ந்து பின்பற்றினால் செவ்வாய் பகவானின் கெடுபலன்கள் குறைந்து, சுப பலன்கள் அதிகரித்து உங்களின் திருமணம் சுபமாக நடந்தேறும்.
தொகுப்பு: சுபயோக தாசன்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM