இரு போதைப்பொருள் பாவனையாளர்களை புனர்வாழ்விற்கு அனுப்ப நடவடிக்கை

27 Oct, 2025 | 09:56 AM
image

இரு வேறு சந்தரப்பங்களில் கைது செய்யப்பட்டு கல்முனை நீதிவான் நீதிமன்றில்  முன்னிலைப்படுத்தப்பட்ட போதைப்பொருள் பாவனையாளர்களை உரிய கட்டமைப்புடன் புனர்வாழ்விற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்பர் வீதி பகுதியில் 18 வயதுடைய சந்தேக நபர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த சந்தேக நபர் சுமார் 6 தடவைக்கு மேல் இக் குற்றச்சாட்டுத் தொடர்பில் கைதாகி பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

இம்முறை குறித்த சந்தேக நபரை கல்முனை நீதிமன்ற நீதிவான் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.  பின்னர் சந்தேக நபருக்கு எதிரான சகல ஆதாரங்களையும் அடுத்துவரும் தவணையில் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

இதேவேளை,  பெரிய நீலாவணை பொலிஸ்  பகுதியில் உள்ள மருதமுனை புறநகர் பகுதியில் போதைப்பொருளுடன்  கைதான 32 வயதான மற்றுமொரு  சந்தேக நபரை சிறைச்சாலை அத்தியட்சகரின் ஊடாக புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டிருந்தார். 

மேலும்  இவ்விரு சந்தேக நபர்களும் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டமை காரணமாக  உரிய கட்டமைப்புடன் புனர்வாழ்விற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த...

2025-12-15 00:42:07
news-image

பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் விசேட அறிக்கை

2025-12-14 20:53:23
news-image

திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமி...

2025-12-14 22:49:10
news-image

அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்காக இலங்கை வந்த...

2025-12-14 22:04:01
news-image

கந்தளாய் குளத்தின் வான் கதவுகள் திறப்பு

2025-12-14 19:41:06
news-image

அரசாங்கத்தின் பங்களிப்பில் கல்வி பயின்று, பாராட்டுப்...

2025-12-14 19:51:08
news-image

இந்த நேரத்தில் கல்வி மாணவர்களுக்குச் சுமையாக...

2025-12-14 17:12:00
news-image

யாழில். தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின்...

2025-12-14 17:13:55
news-image

நாட்டிலிருந்து புறப்பட்டது அமெரிக்க குழு

2025-12-14 17:12:45
news-image

அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி...

2025-12-14 16:09:36
news-image

நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் உறுதியுடன் ஒன்றிணைந்து...

2025-12-14 16:09:19
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வாகனம் தீப்பிடித்து...

2025-12-14 15:32:01