பத்தேகமவில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு!

Published By: Digital Desk 1

27 Oct, 2025 | 11:03 AM
image

காலியில் பத்தேகம - மஹாலியனகேவத்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பத்தேகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை(26) இரவு பதிவானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர், பத்தேகம, சந்தரவள பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய பெண் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வீட்டில் தனியாக வசித்துவந்த குறித்த பெண், பல நாட்களாக வெளியே வராமல் இருந்துள்ள நிலையில் வீட்டில் விளக்குகள் எரிந்ததால் சந்தேகம் இருப்பதாக பத்தேகம பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, பத்தேகம பொலிஸார் குறித்த வீட்டை சோதனை செய்தபோது, குறித்த பெண் வீட்டின் தரையில் நிர்வாணமாகக் கிடந்துள்ளதுடன், அவரது உடலிலிருந்து இரத்தம் கசிந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீதவான் விசாரணைக்காக சடலம் சம்பவம் நடந்த இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பத்தேகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2026-08-10 06:06:40
news-image

நீதிமன்றம், சிறைச்சாலை மறுசீரமைப்புகள் குறித்து அகில...

2026-08-10 05:24:04
news-image

2027 வைத்தியர் இடமாற்றப் பட்டியல் குறித்து...

2026-08-10 05:19:36
news-image

சிறைச்சாலை கலவரங்களை உருவாக்க எதிர்க்கட்சிக்கு அதிகாரம்...

2026-08-10 05:14:18
news-image

அரசாங்கம் பதவி விலகுமாறு கோரவில்லை; தனிப்பட்ட...

2026-08-10 01:54:59
news-image

“நீதிபதிகளின் வயதெல்லை அதிகரிப்புக்கு நாடு முழுவதும்...

2026-08-10 01:51:38
news-image

ஹர்ஷன நாணயக்கார தோல்வியை ஒப்புக்கொண்டு உடனடியாகப்...

2026-08-09 14:33:03
news-image

நீதிபதிகளின் பதவிக் கால நீடிப்பால் ஏற்படும்...

2026-08-09 15:52:35
news-image

சமூக ஊடகங்கள் மூலம் சிறைச்சாலை அநீதியை...

2026-08-09 14:34:30
news-image

சிறைச்சாலைகளில் கைதிகள் மிருகங்களை விடவும் மோசமாக...

2026-08-09 14:57:24
news-image

சிறை மோதலுக்கு எதிர்க்கட்சிகளை குறை கூறுவது...

2026-08-09 15:25:39
news-image

ஜே.ஆரின் அரசியலமைப்புக்கு அரசாங்கம் மேலும் வலு...

2026-08-09 14:48:04