(நெவில் அன்தனி)
நவி மும்பை டி வை பட்டில் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (26) நடைபெற்ற ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி மழையினால் இடையில் கைவிடப்பட்டது.
இந்தப் போட்டியுடன் ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்டில் முதல் சுற்றுப் போட்டிகள் நிறைவடைந்தன.
மழையினால் அவ்வப்போது தடைப்பட்ட இந்தப் போட்டி அணிக்கு 27 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது.
முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பங்களாதேஷ் 27 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 119 ஓட்டங்களைப் பெற்றது.
ஷமிம் அக்தர் 36 ஓட்டங்களையும் சோபனா அக்தர் 26 ஓட்டங்களையும் பெற்று துடுப்பாட்டத்தில் ஓரளவு பிரகாசித்தனர்.
பந்துவீச்சில் ராதா யாதவ் 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஸ்ரீ சரணி 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
27 ஓவர்களில் 126 ஓட்டங்கள் என்ற திருத்தப்பட்ட வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 8.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 57 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழை பெய்ததால் இரவு 10.20 மணிக்கு ஆட்டம் கைவிடப்பட்டது.
ஸ்ம்ரித்தி மந்தனா 34 ஓட்டங்களுடனும் அறிமுக வீராங்கனை அமன்ஜோத் கோர் 15 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
களத்தடுப்பின்போது ப்ரதிக்கா ராவல் உபாதைக்குள்ளானதால் அமன்ஜோத் கோர் ஆரம்ப வீராங்கனையாக விளையாடினார்.
அரை இறுதிப் போட்டிகள்
இங்கிலாந்துக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையிலான முதலாவது அரை இறுதிப் போட்டி குவாஹாட்டியில் 29ஆம் திகதி நடைபெறும்.
அவுஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இரண்டாவது அரை இறுதிப் பொட்டி நவி மும்பை டி வை பட்டில் விளையாட்டரங்கில் 30ஆம் திகதி நடைபெறும்.
இப் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள் நவி மும்பை டி வை பட்டில் விளையாட்டரங்கில் நவம்பர் 2ஆம் திகதி ஐசிசி மகளிர் 50 ஓவர் கிரிக்கெட் உலக சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் விளையாடும்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM