கொலை கலாசாரத்தை கட்டுப்படுத்த முடியாத நிலைமையில் அரசாங்கம் - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

26 Oct, 2025 | 04:51 PM
image

மக்கள் ஆதரவில் அதிகாரத்தைக் கைப்பற்றியவர்கள் இன்று சுகபோகங்களை அனுபவித்து வருகின்றனர். கொலை கலாச்சாரம் முழு நாட்டையும் ஆக்கிரமித்துள்ளது.  ஆனால் அரசாங்கத்தால் அதனை கட்டுப்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இரத்தினபுரி - இறக்குவானை பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை (25) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மக்கள் ஆதரவில் அதிகாரத்தைக் கைப்பற்றியவர்கள் இன்று சுகபோகங்களை அனுபவித்து வருகின்றனர். கொலை கலாச்சாரம் முழு நாட்டையும் ஆக்கிரமித்துள்ளது.  பிரதேசசபைத் தவிசாளரால் பொது மக்கள் தினத்தை கொண்டு நடத்தவோ, நீதிமன்றத்தில் வழக்குகளை விசாரிக்கவோ முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

மனித உரிமை மீறல்கள் எல்லா இடங்களிலும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. அரசாங்கத்தின் இயலாமையால் இந்நடவடிக்கைகளைத் தடுக்க முடியாதுள்ளது. காட்டுச் சட்டம் கோலோச்சி, பாதாள உலகக் கும்பல்கள் நாட்டை ஆளும் சூழலை இந்த அரசாங்கம் உருவாக்கியுள்ளது.

ஆங்கில மொழியாற்றல் தொடர்பில் நான் முன்னர் பேசிய போது என்னை கேலி செய்தனர். ஆனால் இன்று சர்வதேச மாநாடுகளுக்குச் சென்று ஆங்கில மொழியில் பேசத் தெரியாமல் தடுமாற்றமடைகின்றனர். நாட்டின் கல்வி முறைமை நவீனமயமாக்கப்பட வேண்டும். உலக நாடுகளுடன் சகல துறைகளிலும் போட்டியிடுவதற்கான அறிவையும் நுட்பத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை சிறைகளில் உள்ள இந்திய மீனவர்கள்...

2026-08-08 11:54:45
news-image

பல கடற்பகுதிகளுக்கு 'சிவப்பு' மட்ட எச்சரிக்கை!

2026-08-08 11:22:51
news-image

மாகாண சபை தேர்தலை உடனடியாக நடத்துவது...

2026-08-08 11:24:38
news-image

பிரகீத் எக்னெலிகொட வழக்கு: விசேட மூவர்...

2026-08-08 10:56:46
news-image

பரவிபாஞ்சான் பாலத்தை புனரமைக்குமாறு கோரி மக்கள்...

2026-08-08 10:53:50
news-image

யாழில் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாவிகளை இலக்காக...

2026-08-08 10:39:40
news-image

சிறைச்சாலைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒருங்கிணைந்த...

2026-08-08 10:34:00
news-image

புளியங்குளம் பகுதியில் வாகன விபத்து: இளைஞர்...

2026-08-08 09:57:10
news-image

நாளை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை:...

2026-08-08 09:54:46
news-image

இந்தியா–இலங்கை ஆடை வர்த்தக மாநாடு!

2026-08-08 09:47:56
news-image

மெகசின் சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதி...

2026-08-08 09:19:59
news-image

வத்தளை பிறந்தநாள் விழா துப்பாக்கிச்சூடு: துப்பாக்கிதாரி...

2026-08-08 09:17:29