ஜிந்துப்பிட்டி முருகன் கோயிலில் நாளை சூரசம்ஹாரத் திருவிழா

26 Oct, 2025 | 03:20 PM
image

கொழும்பு ஜெயந்தி நகர் ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி  கோயிலில் நாளை 27ஆம் திகதி திங்கட்கிழமை மாலை சூரசம்ஹாரத் திருவிழா நடைபெறவுள்ளது.

இதற்கமைய காலை 5.30 மணிக்கு மூலவருக்கும். சண்முகப் பெருமானுக்கும் ஸ்நபனாபிஷேகம், 8.00 மணி முதல் 10.30 மணி வரை திருச்செந்தூர் புராணம் படித்து பயன் கூறுதல்.

மதியம் 1.30 மணிக்கு மூலவருக்கு விசேட ஸ்நபனாபிஷேகத்தினை தொடர்ந்து மாலை 3.30 மணிக்கு சூரசம்ஹாரத்திற்கு சுவாமி எழுந்தருளல். மாலை 7.00 மணிக்கு வசந்த மண்டப அலங்கார பூஜை நடைபெற்று சுவாமி உள்வீதி இடம்பெறும்.

மறுநாள் 28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணிக்கு அன்னதானமும் மாலை 6.30 மணிக்கு வசந்த மண்டப அலங்கார பூஜையை தொடர்ந்து சேனாதிபதி பட்டாபிஷேகம் ஷகம் நடைபெற்று சுவாமி உள்வீதி வலம் நடைபெறும்.

29 ஆம் திகதி புதன்கிழமை மாலை 5.00 மணிக்கு தெய்வானை அம்மன் திருக்கல்யாணம், 30 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 5.00 மணிக்கு வள்ளி அம்மன் திருக்கல்யாணம், 31 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கு சண்முகார்ச்சனை,திருவூஞ்சல் இறுதியாக நவம்பர் முதலாம் திகதி சனிக்கிழமை காலை 8.00 மணிக்கு தீர்த்தமுடன் நிறைவுபெறும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சைவமங்கையர் வித்தியால பரிசளிப்பு விழா

2025-11-08 13:52:50
news-image

புதியவர்களுக்கு சந்தர்ப்பம் படைப்பாக்கப் போட்டிகள் 

2025-11-06 19:00:38
news-image

ESCO சமாதானக் கலைக் கண்காட்சிக்கு HWPLஇன்...

2025-11-06 18:33:45
news-image

கொழும்பு, கொட்டாஞ்சேனை நல்லாயன் மகளிர் மகா...

2025-11-06 13:13:12
news-image

நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரியின் வருடாந்த...

2025-11-06 09:34:01
news-image

தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்திற்கான கேட்போர்...

2025-11-03 19:04:38
news-image

ஊடகத்தினருக்காக “மூன்றாவது கண்ணுக்கு சிகிச்சை” எனும்...

2025-11-03 05:20:57
news-image

6ஆவது அமர்வு  காணும் ஹைக்கூ கவியரங்கம் 

2025-11-03 05:05:26
news-image

உல­க­ளா­விய இந்­திய வம்­சா­வளி (கோபியோ) அமைப்பின்...

2025-11-03 04:52:06
news-image

பரதநாட்டிய அரங்கேற்றம்

2025-11-02 14:58:13
news-image

சைவ மங்கையர் வித்தியாலய ஆரம்பப்பிரிவு

2025-11-02 13:10:27
news-image

மணி விழாக்காணும் தருமை ஆதீன குருமஹா...

2025-11-01 16:52:49