பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு எம்முடைய பெண்மணிகள் தாய்ப்பாலை வழக்கம்போல் புகட்டுவர். அதில் சில பிள்ளைகள் தாய்ப்பால் அருந்திய பிறகு அவர்களுடைய உடலில் சில இடங்களில் குறிப்பாக தோல் பகுதிகளில் தடிப்பு ஏற்பட்டு விடும். அதனால் அரிப்பு ஏற்பட்டு, அதனை அவர்களுடைய மொழியிலும், செய்கையிலும் வெளிப்படுத்துவார்கள்.
உடனே பெற்றோர்கள் அருகில் இருக்கும் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று வைத்தியரிடம் காண்பிக்கும் போது அவர்கள் ஒவ்வாமை பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது எனக்கூறி, அதற்கு சிகிச்சை அளிப்பார்கள். இந்த தருணத்தில் ஒவ்வாமை பாதிப்பை முழுமையாக களைய நவீன சிகிச்சை அறிமுகமாகி இருப்பதாக குழந்தைகள் நல நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
தோல், நுரையீரல், மூக்கு , தொண்டை, செரிமான மண்டலம் ஆகிய உறுப்புகளில் ஏற்படும் சில அறிகுறிகள் மூலம் ஒவ்வாமை பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என அவதானிக்கலாம். இரவு நேரத்தில் உறங்கும் தருணம் அல்லது உறங்கிய பிறகு தொடர் இருமல், மூக்கு ஒழுகுவது , சளி, பால்மா சம்பந்தப்பட்ட உணவுப் பொருட்கள்.. என பல வகைகளில் ஒவ்வாமை பாதிப்பின் அறிகுறிகள் வெளிப்படும்.
மரபு சார்ந்த காரணிகளாலும், பிறந்தது முதல் குழந்தைகள் வளரும் புறச் சூழல் காரணிகளாலும், அவர்கள் பாவிக்கும் மற்றும் பசியாறும் உணவுப் பொருள்களாலும் ஒவ்வாமை பாதிப்பு ஏற்படக்கூடும்.
இத்தகைய பிள்ளைகளுக்கு தற்போது நவீன பரிசோதனைகள் மூலம் பாதிப்பின் தன்மை மற்றும் காரணத்தை துல்லியமாக அவதானித்து, அதிலிருந்து முழுமையாக நிவாரணம் அளிக்கும் சிகிச்சைகளும் அறிமுகமாகி இருக்கிறது. இம்யூனோதெரபி எனப்படும் நவீன சிகிச்சை மூலம் ஒவ்வாமை பாதிப்பிலிருந்து உங்களுடைய பிள்ளைகளுக்கு முழுமையாக நிவாரணத்தை வழங்க இயலும்.
வைத்தியர் அபிநயா தொகுப்பு அனுஷா.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM