இன்றைய சூழலில் சொந்த காணியில் விவசாயம் செய்யும் விவசாயிகள் யாரும் அவர்களுடைய நிலத்திலிருந்து செழிப்பான வருவாயை பெறுவதில்லை. அவர்கள் முதலீடு + கடின உழைப்பு இரண்டும் இருந்தும் ..அவர்களால் முதலீட்டை கூட திரும்பப் பெற முடிவதில்லை. வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள் கடன் வழங்கினாலும்.. காணியிலிருந்து வெற்றிகரமான மகசூலை பெற முடிவதில்லை.
இதற்கு வெவ்வேறு காரணங்களை விவசாயிகளும், இத்துறை நிபுணர்களும் முன் வைப்பார்கள். ஆனால் விவசாயத்தை நம்பி இருக்கும் விவசாயிகள் குறிப்பாக நெல்லை விதைத்து அறுவடை செய்யும் விவசாயிகள்.. தங்களின் விளைப்பொருட்கள் அதிகரிக்க வேண்டும் என்றால் ... அதற்கும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் சில சூட்சமமான குறிப்புகளை வழங்கியிருக்கிறார்கள்.
இதற்கு தேவையான பொருட்கள் : நவதானியங்கள்
உங்களுடைய காணியின் பரப்பளவிற்கு ஏற்ப கணிசமான அளவிற்கு நவ தானியங்களை வாங்கி, அதனை அறுவடை நிறைவடைந்த பிறகு அந்த விவசாய பூமியில் தூவி விட வேண்டும். ஒரு மாதம் கழித்து அவை விளைச்சலை அடைந்தவுடன் பசுவையும், கன்றுக்குட்டியையும் அதனை பசியாறுவதற்காக அந்த காணியில் மேய்ச்சலுக்கு விட வேண்டும்.
அவை விளைந்த நவ தானியங்களை பசியாறி உங்களது நிலத்தில் கோமியத்தையும், சாணியையும் வெளியேற்றினால்.. உங்களுடைய விவசாய நிலத்தின் தன்மை சுபிட்சத்தன்மை உள்ளதாக மாற்றம் பெறும். அதனைத் தொடர்ந்து நீங்கள் மீண்டும் நெல்லை விதைத்து பயிரிட்டால்... அதிலிருந்து கிடைக்கும் மகசூல் என்பது மிக அதிகமாக இருக்கும். அத்துடன் இத்தொழிலில் உங்களை உற்சாகத்துடன் இயங்கவும் செய்யும்.
தொகுப்பு: சுபயோக தாசன்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM