இந்திய அணிக்கெதிரான 3 ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் சுழல்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் விளையாடமாட்டரென இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கண்டி பல்லேகலயில் இடம்பெறவுள்ள இரு அணிகளுக்குமிடையிலான  3 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் ரங்கன ஹேரத் விளையாடமாட்டாரென இலங்கை கிரிக்கெட்டின் முகாமையாளர் அசங்க குருசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இலங்கை கிரிக்கெட்டின் முகாமையாளர் அசங்க குருசிங்க தெரிவிக்கையில், 

இரு இலங்கை வீரர்கள் 3 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு இணைக்கப்பட்டுள்ளதகவும் ஒருவர் ரங்கன ஹேரத்திற்கு பதிலாகவும் மற்றையவர் ஏற்கனவே உபாதையால் பாதிக்கப்பட்டுள்ள நுவான் பிரதீப்பிற்கு பதிலாகவும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

இந்திய அணிக்கெதிரான தொடரில் இலங்கை அணியை பொருத்தவரையில் ஹேரத் 3 ஆவது நபராக உபாதைக்குள்ளனவர்கள் வரிசையில் உள்ளார். இதற்கு முன்னர் நுவான் பிரதீப் மற்றும் அசேல குணவர்தன ஆகியோர் உபாதைக்குள்ளாகியுள்ளனர்.

3 டெஸ்ட் போட்டிகளிலும் குறைந்தது 200 ஓவர்கள் பந்து வீசியுள்ளதால் ஹேரத்தின் உடல்நிலையில் பாதிப்பேற்படா வண்ணம் அவரை அணியில் இருந்து வெளியில் அழைத்துள்ளோம். 

இதேவேளை, கண்டிக்கு பயணம் மேற்கொண்டு விளையாடுவதைவிட கொழும்பில் இருந்து சிகிச்சை பெறுவது மேல் என ஹேரத் தெரிவித்திருந்தார்.

மேலும் அவர் எச்சந்தர்ப்பத்திலும் எந்தவொரு டெஸ்ட் போட்டியையும் தவறவிடும் பழக்கமற்றவர் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இந்திய அணி இலங்கை அணிக்கெதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 வெற்றிபெற்று தொடரை வசப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.