பொலிஸாரும் மதுவரித்திணைக்கள அதிகாரிகளும் இணைந்து இரு வேறுபகுதிகளில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கேரள கஞ்சா வைத்திருந்த நால்வரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 

டிக்கோயா நகரப்பகுதியில் கேரள கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த போது ஒருவரை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர். இதேவேளை, திம்புள்ள பிரதேசத்தில் வைத்து வெயாங்கொட பகுதியிலிருந்து நுவரெலியா சென்ற வேன் ஒன்றிலிருந்து பாவனைக்காக வைத்திருந்த ஒருத்தொகை கேரள கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 75000 மில்லி கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கைது செய்யப்பட்டவர்களை இன்று ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஹட்டன் மதுவரித்திணைக்களம் தெரிவித்துள்ளது.