இலங்கை - பாகிஸ்தான் மகளிர் உலகக் கிண்ணப் போட்டி கைவிடப்பட்டது; கொழும்பில் கைவிடப்பட்ட 5ஆவது போட்டி

Published By: Vishnu

24 Oct, 2025 | 08:53 PM
image

(நெவில் அன்தனி)

கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் சீரற்ற கால நிலையால் தாமதித்து ஆரம்பமான இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 4.2 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் மழையினால் கைவிடப்பட்டது.

கொழும்பில் நடைபெற்ற இந்த வருடத்திற்கான கடைசி ஐசிசி மகளிர் உலகக் கிண்ணப் போட்டி இதுவாகும்.

கொழும்பில் நடைபெற்ற 11 போட்டிகளில் 5 போட்டிகள் மழையினால் கைவிடப்பட்டன.

பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகவிருந்த இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி மழை காரணமாக மூன்றே கால் மணித்தியாலங்கள் தாமதித்து மாலை 6.15 மணிக்கு ஆரம்பமானது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பாகிஸ்தான் 4.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 18 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழை பெய்ததால் மாலை 6.34 மணிக்கு ஆட்டம் நிறுத்தப்பட்டது.

பின்னர் இரவு 8.20 மணியளவில் ஆட்டம் கைவிடப்பட்டதாக ஐசிசி போட்டி தீர்ப்பாளர்கள் உத்தியோகபூர்வமாக அறிவித்தனர்.

இப் போட்டி கைவிடப்பட்டதை அடுத்து இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படட்து.

இதற்கு அமைய அணிகள் நிலையில் 5 புள்ளிகளுடன் இலங்கை 5ஆம் இடத்தில் இருக்கிறது. பங்களாதேஷுடனான போட்டியில் வெற்றியீட்டிய இலங்கைக்கு 3 போட்டிகளில் சீரற்ற காலநிலை காரணமாக முடிவு கிட்டவில்லை.

இன்னும் ஒரு போட்டி மீதமாகவுள்ள நியூஸிலாந்து 4 புள்ளிகளுடன் 6ஆம் இடத்திலும் பாகிஸ்தான் 3 புள்ளிகளுடன் 7ஆம் இடத்திலும் பங்களாதேஷ் 8 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் உள்ளன.

பங்களாதேஷுக்கு இன்னும் ஒரு போட்டி இந்தியாக்கு எதிராக இருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெலிக்கன்ஸின் சொந்த கோல் உதவியுடன் சம்பியன்ஸ்...

2026-01-25 07:41:17
news-image

இலங்கையை வீழ்த்தி தொடரை சமப்படுத்தியது இங்கிலாந்து

2026-01-24 22:32:38
news-image

சம்பியன்ஸ் லீக்கில் தோல்வி அடையாத அணி...

2026-01-24 22:11:01
news-image

இங்கிலாந்துடனான 2ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்:...

2026-01-24 18:29:16
news-image

ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணத்தில்...

2026-01-24 22:09:16
news-image

83வது தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: இலங்கை...

2026-01-24 13:45:02
news-image

சென் மேரிஸ் கழகத்திற்கு தீர்மானம் மிக்க...

2026-01-24 13:05:56
news-image

டயலொக் தலைமையகத்தில் ஐசிசி ஆடவர் ரி20...

2026-01-23 20:19:55
news-image

19 வயதின் கீழ்  ஆண்க  உலகக்...

2026-01-23 17:19:50
news-image

ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக்...

2026-01-23 14:58:50
news-image

தீர்மானம் மிக்க நியூ ஸ்டார் -...

2026-01-23 17:21:25
news-image

ஐசிசி 19 வயதின்கீழ் ஆண்கள் உலகக்...

2026-01-23 12:52:20