உலகின் முன்னணி சரக்கியல் நிறுவனமான DHL நிறுவனமானது நிலையான இலாப வளர்ச்சியை மேம்படுத்தல் மற்றும் அனைத்து பங்கு உரிமையாளர்களினாலும் பகிர்ந்து கொள்ளக்கூடிய பெறுமதி உருவாக்கம் போன்றவற்றை உறுதி செய்யும் வகையில் வர்த்தக செயற்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ‘நியாயமான மற்றும் பொறுப்புமிக்க சரக்கியல்’ போக்குகள் தொடர்பிலான புதிய ஆய்வினை வெளியிட்டுள்ளது.

சரக்கியல் துறையில் ஸ்திரத்தன்மை மற்றும் பொறுப்புக்களை துரிதப்படுத்துவதற்காக Deutsche Post DHL குழுமத்தினுள் மேற்கொள்ளப்படும் தொடர் முயற்சியாக இந்த ஆய்வு அமைந்துள்ளதுடன், DHL Trends  ஆய்வு குழு மூலம் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. 

இந்த ஆய்வில், நியாயமான மற்றும் பொறுப்புமிக்க உருமாற்றத்தின் முக்கிய பிரிவுகள் குறித்தும், மிக முக்கியமாக நுகர்வோரின் வளர்ந்துவரும் ‘நியாயமான’ எதிர்பார்ப்புகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இன்று பல நிறுவனங்கள் வர்த்தக புத்துயிர்ப்பின் முக்கிய ஆதாரங்களாக டிஜிட்டலாக்கம் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை நம்பியுள்ள நிலையில், எதிர்கால வளர்ச்சி மற்றும் நீடித்த போட்டி அனுகூலங்களின் மூலாதாரமான நியாயமான மற்றும் பொறுப்புமிக்க வர்த்தகத்தின் இயக்கம் தொடர்பில் அதிக கவனம் செலுத்துவதில்லை என இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வட்ட பொருளாதாரம் மற்றும் நியாயமான அணுகல், உற்பத்தி மற்றும் வர்த்தகம் ஆகியவற்றை சரக்கியல் நிறுவனங்கள் எவ்வாறு எளிதாக்குகின்றன என்பது தொடர்பான 15 நிகழ்வுகளை இந்த ஆய்வு விவரிக்கிறது. இந்த நிகழ்வுகளுடாக, DHL நிறுவனம் நியாயமான மற்றும் பொறுப்புமிக்க சரக்கியல் நோக்கிய கருப்பொருளினை விருத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.

சரக்கியலால் நியாயமான மற்றும் பொறுப்புமிக்க மாற்றத்தை வழிநடத்த முடியும். 

இன்றைய காலநிலையில், பாரிய உற்பத்தி மற்றும் நுகர்வு காரணமாக உலகளாவிய சமூகங்கள் மற்றும் சூழலில் ஏற்பட்டுள்ள சமநிலையின்மை காரணமாக, நிலையான எதிர்காலத்தை உறுதி செய்வதென்பது முன்னரைக் காட்டிலும் சவால் நிறைந்ததாகவே காணப்படுகிறது. ‘நல்லதைச் செய்வதிலிருந்தே சிறப்பானதை செய்வது உருவாகியுள்ளது’ என்பதே இந்த அறிக்கையின் தொனிப்பொருளாகும்.  இந்த அணுகுமுறையை பின்பற்றுவதனூடாக உலகளாவிய வர்த்தக வலைமைப்புகள் மற்றும் விநியோக சங்கிலிகளை நிர்வகிக்கும் அதன் நிலையை விருத்தி செய்து கொள்ளவும், ஏனைய துறைகளிலும் நியாயமான மற்றும் பொறுப்புமிக்க வர்த்தகத்தையும் துரிதப்படுத்திக் கொள்ளவும் முடியும்.

“பங்கு உரிமையாளர்களிடமிருந்து நியாயமான மற்றும் பொறுப்புமிக்க வர்த்தக நடைமுறைகளுக்கான கேள்வி அதிகரித்து வருவதை நாம் அவதானித்துள்ளதுடன், இந்த போக்கினை பின்பற்றுவதனூடாக சரக்கியலை துரிதப்படுத்திக்கொள்ள முடியும் எனவும் நாம் நம்புகிறோம். ‘ஒட்டுமொத்த விநியோக சங்கிலி முழுவதும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தவும், ‘நியாயமான’ வர்த்தகத்தை முன்னெடுக்கவும் உதவும் முக்கிய பிரிவாக உலகளாவிய அணுகலுடன் கூடிய வலையமைப்பு வர்த்தகமாக சரக்கியல் திகழ்கிறது” என DHL வாடிக்கையாளர் தீர்வுகள் மற்றும் புத்தாக்கம் நிறுவனத்தின் Innovation and Trend Research பிரிவின் உப தலைவர் முனைவர்.மார்க்கஸ் கொகயாஸ் தெரிவித்தார்.  

நியாயமான மற்றும் பொறுப்புமிக்க பொதியிடல் தீர்வுகள், அதிகரிக்கும் பொதி தொகுதிகளை பேண உதவுகிறது. விநியோகத்தின் பின்னர் தோட்டங்களில் உரமாகக்கூடிய, மக்கக்கூடிய மற்றும் ஏனைய சூழல் நட்புறவான மூலப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இரண்டாவது புத்தமைவாக “logistics unverpackt” எனும் கருப்பொருள் அமைந்துள்ளது. இது ஒன்லைன் விநியோக பொதியிடலுக்கான தேவையை முற்றாக இல்லாதொழிப்பதுடன், சுழியக்கழிவு (zero-waste) அணுகுமுறையுடன் மீண்டும் பயன்படுத்தக்கூடிய கொள்கலன்களில் பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன.

நிலையான எதிர்காலத்தை உறுதி செய்யும் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு 

‘எமது GoGreen தீர்வுகளுடன் ஏற்கனவே நாம் பொறுப்புமிக்க சரக்கியலுக்காக அதிகரித்து செல்லும் கேள்வியை பூர்த்தி செய்துள்ளதுடன், எமது வாடிக்கையாளர்கள், எமது வர்த்தகம் மற்றும் சூழல் போன்றவற்றுடன் பெறுமதியை பகிர்ந்து கொண்டுள்ளோம்” என Deutsche Post DHL குழுமத்தின் உப தலைவர் பகிரப்பட்ட பெறுமதி பிரிவு (Shared Value), கதெரீனா டொமொஃப் தெரிவித்தார்.