மழையினால் இலங்கை - பாகிஸ்தான் மகளிர் உலகக் கிண்ணப் போட்டி நிறுத்தம்

Published By: Vishnu

24 Oct, 2025 | 08:51 PM
image

(நெவில் அன்தனி)

இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று மாலை 6.15 அணிக்கு ஆரம்பமான போதிலும் 4.2 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் மழையினால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.

பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகவிருந்த இப் போட்டி மழை காரணமாக மூன்றே கால் மணித்தியாலங்கள் தாமதித்து ஆரம்பமானது.

கொழும்பில் இந்த வருடத்துக்கான கடைசி ஐசிசி மகளிர் உலகக் கிண்ணப் போட்டியாக அமையவுள்ள இப் போட்டி அணிக்கு 34 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடும் பாகிஸ்தான் 4.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 18 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழை பெய்ததால் மாலை 6.34 மணிக்கு ஆட்டம் நிறுத்தப்பட்டது.

அணிகள்

இலங்கை: விஷ்மி குணரட்ன, சமரி அத்தபத்து (தலைவி), ஹசினி பெரேரா, ஹர்ஷித்தா சமரவிக்ரம, கவிஷா டில்ஹாரி, நிலக்ஷிகா சில்வா, அனுஷ்கா சஞ்சிவனி, தெவ்மி விஹங்கா, சுகந்திகா குமாரி, மல்கி மதாரா, இனோக்கா ரணவீர.

பாகிஸ்தான்: முனீபா அலி, ஒமெய்மா சொஹெய்ல், சிட்ரா ஆமின், நட்டாலியா பெர்வெய்ஸ், பாத்திமா சானா (தலைவி), ஈமான் பாத்திமா, சியேடா ஆரூப் ஷா, ராமீன் ஷமிம், ஆலியா ரியாஸ், நஷ்ரா சந்து, சாடியா இக்பால்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிபா உலகக் கிணத்தை வெலலப் போவது...

2026-07-19 14:37:01
news-image

கோல் கெலன்ட்ஸ் அணி 5 விக்கெட்களால்...

2026-07-19 13:38:29
news-image

கோல் மழை பொழியப்பட்ட போட்டியில் பிரான்ஸை...

2026-07-19 10:04:41
news-image

சகோதர கழகங்களுக்கு இடையிலான சுப்பர் லீக்...

2026-07-19 09:14:36
news-image

ரீஸா ஹெண்ட்றிக்ஸ், குல்பாதின் நய்ப் அபாரம்;...

2026-07-18 21:25:07
news-image

கிரிக்கெட் ஜாம்பவான் சேர் கார்பீல்ட் சோபர்ஸ்...

2026-07-18 09:51:09
news-image

நடப்பு சம்பியன் புளூ ஸ்டார் கழகத்தை...

2026-07-18 05:26:17
news-image

கோலாகல ஆரம்ப விழாவுடன் எல்பிஎல் தொடங்கியது;...

2026-07-18 00:35:39
news-image

வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஆறுதல் வெற்றியை...

2026-07-18 08:46:44
news-image

ஜெவ்னா கிங்ஸ் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வெளியாகும்...

2026-07-17 15:31:54
news-image

இந்தியாவுடனான ஒருநாள் தொடரை இங்கிலாந்து சமப்படுத்தியது;...

2026-07-17 12:24:24
news-image

ஆட்ட நிர்ணயம் தொடர்பில் லங்கா பிறீமியர்...

2026-07-17 15:31:56