2025 இலக்கிய மாதத்துடன் இணைந்ததாக கலைகள் மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “பளிங்கு ரேண” (Wingfield Family) மேடை நாடகம் இலங்கை பாராளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகிலுள்ள வைபவ மண்டபத்தில் நேற்றைய தினம் (23) பிற்பகல் 7 மணிக்கு வெற்றிகரமாக மேடையேற்றப்பட்டது.
பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவும் கலந்துகொண்டார்.

நாடகம் தொடங்குவதற்கு முன்னர் கலைகள் மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி மற்றும் ஒன்றியத்தின் உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் (பேராசிரியர்) சேன நாணயக்கார ஆகியோர் நாடகம் குறித்த அறிமுகத்தை வழங்கினர்.
இந்த “பளிங்கு ரேண” மேடை நாடகம் அமெரிக்காவின் பிரபல நாடக ஆசிரியர் டென்னிசி வில்லியம்ஸின் The Glass Menagerie எனும் சிறந்த தரத்திலான மேடை நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.


இலங்கை நாடக ஆசிரியர் ஹென்றி ஜயசேன அவர்களினால் சிங்கள மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு எழுதப்பட்ட இந்த “பளிங்கு ரேண” மேடை நாடகம், பூஜித்த டி மெல்லினால் இயக்கப்பட்டுள்ளது. பழம்பெரும் நடிகை சாந்தனி செனவிரத்ன, ஸ்செவியர் கனிஷ்க, மனுஷி டானியா, பிம்சர சில்வா உள்ளிட்ட பல கலைஞர்களின் பங்களிப்புடன் இந்த மேடை நாடகம் அரங்கேற்றப்பட்டது.
இங்கு கருத்துத் தெரிவித்த பிரதமர் (கலாநிதி) ஹரிணி அமரசூரிய, கலை மற்றும் கலாசாரம் மீது காணப்படும் உணர்திறன் காரணமாக ஒருவருடைய வாழ்க்கை மேம்படுவதுடன், கலாசாரம் இன்றி வளமான நாட்டை உருவாக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
சமூகத்தை வெவ்வேறு கோணங்களில் பார்ப்பதில் இத்தகைய கலை நடவடிக்கைகள் பெரும் பங்கு வகிக்கின்றன என்பதை சுட்டிக்காட்டிய கௌரவ பிரதமர், இந்த மேடை நாடகத்தை ஏற்பாடு செய்த கலைகள் மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்திற்கும் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.



இங்கு கருத்துத் தெரிவித்த புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி,
பாராளுமன்றம் ஒரு கடுமையான இடம் அல்ல, மாறாக தனிநபர்களுக்கு உணர்திறன் கொண்ட இடம் என்பதை நிரூபிக்கும் ஒரு சிறப்பு சந்தர்ப்பம் இது என்றும், மனித உறவுகளை மேலும் பாதுகாப்பதற்கான ஒரு தனித்துவமான வழியாக இதுபோன்ற கலை நிகழ்வுகளை அறிமுகப்படுத்த முடியும் என்றும் குறிப்பிட்டார்.
அத்துடன், இலங்கையில் கலை மற்றும் கலாசார நடவடிக்கைகளை மேம்படுத்துவவதற்கு கலைகள் மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியம் எதிர்காலத்தில் ஒத்துழைப்பு வழங்கும் என்றும், இதன் அடிப்படையில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படும் என்றும் குறித்த ஒன்றியத்தின் உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
இந்த நிகழ்வில் பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி, குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் கயந்த கருணாதிலக, அமைச்சர்கள், கௌரவ பிரதியமைச்சர்கள், கலைகள் மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண, பிரதி இணைத் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் ருவன் மாப்பலகம, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்க, (சட்டத்தரணி) சுசந்த தொடாவத்த மற்றும் சுகத் வசந்த டி சில்வா உள்ளிட்ட ஒன்றியத்தின் உறுப்பினர்கள் மற்றும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள், பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன, பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, பாராளுமன்ற பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.































கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM