எம்மில் பலரும் நாளாந்தம் தங்களது கடமைகளை மேற்கொண்டு வருவர். இதில் சிலருக்கு சலிப்பும் ஏற்படக்கூடும். காலையில் எழுந்ததும் வழக்கமான பணிகள் - வாடிக்கையாளர்கள்- அவர்களுக்கான இன்முகத்துடன் கூடிய சேவைகள் - என தொழில் வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே சீராக பயணித்துக் கொண்டிருக்கும். கிட்டத்தட்ட லாபத்தின் அளவும் ஒரு எல்லைக்குள்ளேயே இருக்கும்.
இவர்கள் தங்களின் லாபத்தை அதிகரிப்பதற்கான வழிகளை ஆலோசித்து இருந்தாலும்... அதனை சாத்தியப்படுத்துவதற்கான நடைமுறைகளில் தயக்கத்தையும் கொண்டிருப்பர்.
இந்நிலையில் தொழில் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி உச்சத்தை தொடுவதற்கும்.. வாழ்க்கையில் மகிழ்ச்சியை மேம்படுத்திக் கொள்வதற்கும் விருப்பம் இருந்தாலும்.. அதற்கான சூட்சமங்கள் தெரியாமல் தவித்துக் கொண்டிருப்பர்.
இவர்களுக்கு எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் ஒரு பிரத்யேகமான குறிப்பினை வழங்கி இருக்கிறார்கள். இதனை பின்பற்றினால் வாழ்க்கையில் மாற்றமும், மகிழ்ச்சியும் நிரந்தரமாகும்.
இதற்கு தேவையான பொருட்கள் : ரசகுல்லா எனப்படும் பிரத்யேக இனிப்பு பொருள்.
ரசகுல்லா எனும் இனிப்பினை அதற்கான பிரத்யேக விற்பனை நிலையத்தில் இருந்து வாங்கிட வேண்டும். இதனை வெள்ளிக்கிழமைகளில் வாங்கி, சுக்கிர ஹோரை தருணம் என குறிப்பிடப்படும் இரவு எட்டு மணி முதல் ஒன்பது மணிக்குள்ளாக.. ஆறு என்ற எண்ணிக்கையிலான ரசகுல்லாவை ஒரு பக்கற்றுகளில் அடைத்து, அதே போல் ஆறு பக்கற்றுகளை வாங்கி, ஆறு நபர்களுக்கு அதனை தானமாக வழங்கிட வேண்டும்.
இதனை நீங்கள் தொடர்ந்து ஆறு வாரம் மேற்கொண்டால்.. உங்களது தொழிலில் லாபம் அதிகரிப்பதுடன்... உள்ளத்தில் மகிழ்ச்சி அதிகரிப்பதையும் உணரலாம். அதே தருணத்தில் ரசகுல்லா எனும் இனிப்பை எம்மால் வாங்கி சாப்பிட இயலுமா..! என ஏக்கத்துடன் இருப்பவர்களை துல்லியமாக அவதானித்து அவர்களுக்கு வழங்கினால்.. கூடுதல் பலன் விரைவாக கிடைக்கும்.
தொகுப்பு : சுபயோக தாசன்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM