எம்மில் சிலருக்கு கை மற்றும் காலை நீட்டி மடக்கும் போது கடுமையான வலி ஏற்பட்டிருக்கும். இவை சில வினாடிகள் முதல் சில நிமிடங்கள் வரை நீடிக்கும். வேறு சிலருக்கு அவர்களுடைய தோல் பகுதியில் கூச்ச உணர்வு அல்லது எரிச்சல் உணர்வு ஏற்படக்கூடும்.
இத்தகைய பாதிப்பை மருத்துவ மொழியில் கம்பார்ட்மெண்ட் சிண்ட்ரோம் என குறிப்பிடுகிறார்கள். லட்சத்தில் பத்து பேருக்கு இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும் என அறிவுறுத்தும் வைத்தியர்கள் இது தொடர்பாக அறிமுகமாகி இருக்கும் நவீன சிகிச்சைகளை பற்றி பின்வருமாறு தெரிவிக்கிறார்கள்.
கம்பார்ட்மெண்ட் சிண்ட்ரோம் என்பது உங்களுடைய தசைகளை சுற்றி இயல்பான அளவைவிட கூடுதலான அழுத்தம் ஏற்படும் போது உருவாகிறது. இதன் காரணமாக உங்களுடைய தசைகளுக்கும், நரம்புகளுக்கும் கிடைக்க வேண்டிய குருதி, ஓக்சிஜன், ஊட்டச்சத்துகள் போன்றவற்றில் தடை ஏற்படுகிறது. இதன் காரணமாக குருதி ஓட்டம் கட்டுப்படுத்தப்பட்டு, வலியும், அசௌகரியமும் உண்டாகிறது.
இத்தகைய தருணத்தில் எம்முடைய தசைகளில் மீது அமையப்பெற்றிருக்கும் ஃபாசியா என்ற மெல்லிய சவ்வு மீது கூடுதல் அழுத்தம் ஏற்பட்டு, அவை உங்களுடைய தசைகளின் இயல்பான பணியை பாதிக்கிறது.
காயம் ஏற்பட்டாலும் அல்லது பேணி பராமரிக்கப்பட்டு கட்டுப்பாட்டில் இல்லாத மன அழுத்தம் காரணமாகவோ இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும் என வைத்தியர்கள் விளக்கமளிக்கிறார்கள்.
தசை வீக்கம், தசை வலி, கை, கால்களை இயக்கும் போது வலி அல்லது உணர்வின்மை, தோலில் கூச்ச உணர்வு அல்லது எரிச்சல், தசைகளில் மாற்றம் ஏற்பட்டிருப்பது போன்ற உணர்வு ... ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.
இத்தகைய அறிகுறிகள் ஏற்பட்டால் ... அருகில் இருக்கும் வைத்தியசாலைக்குச் சென்று வைத்தியர்களை சந்தித்தால் அவர்கள் எக்ஸ்ரே, தசை அழுத்த பரிசோதனை ஆகியவற்றை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிப்பார்கள்.
இதனைத் தொடர்ந்து நவீன மருத்துவ தொழில்நுட்பத்தின் மூலம் கண்டறியப்பட்ட பிரத்யேக மருந்தியல் சிகிச்சையை வழங்கி நிவாரணம் வழங்குவார்கள். அதனுடன் பிசிகல் தெரபி எனும் பிரத்யேக உடற்பயிற்சியையும், பிரத்யேக காலணியை அணிந்து கொள்ள வேண்டும் என்றும் பரிந்துரைப்பார்கள்.
வெகு சிலருக்கு மட்டுமே ஃபாசியா எனும் சவ்வுகளில் ஏற்பட்டிருக்கும் அழுத்தத்தை நீக்க பிரத்யேக சத்திர சிகிச்சையை மேற்கொண்டு முழுமையான நிவாரணத்தை வழங்குவார்கள்.
வைத்தியர் தியாகராஜன் தொகுப்பு அனுஷா.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM