இன்றைய திகதியில் எம்மில் பலரும் தங்களது பிள்ளைகளுக்கு அவர்கள் விரும்பிய உணவை... அகால தருணத்திலும் கூட பசியாறுவதற்காக வழங்குகிறார்கள். இதன் காரணமாக பிள்ளைகள் - அவர்களின் இயல்பான உடல் எடையிலும், வளர்ச்சியிலும் பாரிய பாதிப்பு ஏற்படுகிறது. இத்தகைய தருணங்களில் எம்முடைய பிள்ளைகளின் அதிகரித்த உடல் எடைக்கான காரணங்கள் குறித்தும், அதற்கான சிகிச்சைகள் குறித்தும் எம்முடைய பெற்றோர்களுக்கு வைத்தியர்கள் பின்வருமாறு விளக்கமும், வழிகாட்டலும் அளிக்கிறார்கள்.
உங்களுடைய பிள்ளை ஆறு வயதிற்கு மேற்பட்டவர்களாக இருந்தால்... அவர்களுடைய உடல் எடை இயல்பை விட கூடுதலாக இருக்கிறது என பெற்றோர்கள் கருதினால்... அருகில் இருக்கும் வைத்தியசாலைக்குச் சென்று வைத்தியரை அணுக வேண்டும் . அவர்கள் இதற்கான உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரைத்திருக்கும் விதிமுறைகளின் படி உடல் எடையையும், பிள்ளையின் வளர்ச்சி விகிதத்தையும் கணக்கிடுவார்கள். அதில் உங்களது பிள்ளை இயல்பான எடை - இயல்பான அளவை விட கூடுதல் எடை- அதனைக் கடந்து உடற் பருமன் - இவற்றில் எந்த நிலையில் இருக்கிறார் என்பதனை துல்லியமாக அவதானிப்பார்கள்.
அதனைத் தொடர்ந்து பிள்ளைகளின் உடல் எடை அதிகரித்ததற்கான காரணம் என்ன? என்பதை அவதானிப்பார்கள். உடலில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டு அதன் காரணமாக உடல் எடை அதிகரிக்கிறதா? அல்லது அவர்கள் பசியாறும் உணவிற்கு ஏற்ப உடல் இயக்கம் இல்லாததால் சோர்வடைந்து, உடல் எடை அதிகரித்திருக்கிறதா? என்பதனை அவதானிப்பார்கள்.
இதனை பன்னிரண்டு வயதிற்குள்ளாக கண்டறிந்தால்.. அவர்களுக்கு சரியான முறையில் வைத்திய சிகிச்சையும், பயிற்சியும் அளித்து உடல் எடையை சீராக பராமரிக்க இயலும். பதினாறு வயதிற்கு மேற்பட்டவர்களாக இருந்தால் அவர்களுடைய உடல் எடை அதிகமாக இருந்தால்.... அதனை குறைப்பதற்கு கடும் உழைப்பும், ஒத்துழைப்பும் அவசியமாகும். பதினாறு வயதிற்கு உட்பட்டவர்களாக இருந்தால் அவர்கள் உடற் பருமனாக இருந்தாலும் முறையான உணவு முறை மற்றும் நாளாந்த உடற்பயிற்சி மூலம் அவர்களின் உடல் எடையை குறைத்து சீராக பராமரிக்கலாம்.
வைத்தியர் மேகநாதன்
தொகுப்பு அனுஷா.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM