எம்மில் பலரும் சர்வதேச நாடுகளில் புலம் பெயர்ந்து தங்களது வாழ்வாதாரத்தை உருவாக்கி, தன்னிறைவை பெற்றவர்களிடம் சிறிய அளவிலான நிதி உதவியை நன்கொடையாக பெற்று, இங்கு தங்களுக்கு நன்கு தெரிந்த தொழிலை செய்யத் தொடங்குவார்கள். தொடக்கத்தில் தொழில் மீதான கட்டற்ற ஆர்வத்தின் காரணமாக வாடிக்கையாளர்களை கவர்ந்து அவர்களுக்கு நியாயமான கட்டணத்தில் சேவை செய்து தொழிலில் ஓரளவு லாபத்தை வருவாயாக ஈட்டி வருவார்கள். ஆனால் சிலருக்கு சில தருணங்களில் தொழிலில் சூட்சமம் பிடிப்பட்டிருந்தாலும்.. நிதி உதவி தாராளமாக கிடைத்தாலும்... லாபம் மட்டும் எதிர்பார்த்த அளவிற்கு கிடைக்காது. சில தருணங்களில் லாபமும் இல்லாமல்... நஷ்டமும் இல்லாமல்... தொழில் நடைபெறும் . இத்தகைய தருணத்தில் தொழிலின் அனுபவம் இருந்தாலும் லாபம் இல்லாத நிலையில் மாற்றத்தை விரும்பினால்... அதற்கும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் சில பிரத்யேகமான குறிப்புகளை வழங்கியிருக்கிறார்கள். இதனை நீங்கள் தொடர்ச்சியாக நம்பிக்கையுடன் பின்பற்றும் போது... தொழிலில் நீங்கள் எதிர்பாராத அளவிற்கு லாபத்தை ஈட்டலாம்.
இதற்கு தேவையான பொருட்கள் : மஞ்சள் வண்ண லட்டு.
அருகில் இருக்கும் இனிப்பு பொருட்கள் விற்பனை நிலையத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கும் மஞ்சள் வண்ணத்திலான லட்டுவை ஏழு என்ற எண்ணிக்கையில் வாங்கிக் கொள்ளுங்கள். ஒரு வியாழக்கிழமையை தெரிவு செய்து , சூரிய உதயத்திற்கு முன்பாக எழுந்து யார் தொழில் செய்கிறார்களோ.. அவர்களை கிழக்கு திசை நோக்கி நிற்க வைத்து, ஏழு லட்டுவையும் வலமிருந்து இடமாக அவர்களின் தலையை சுற்ற வேண்டும். அதன் பிறகு அந்த ஏழு லட்டையும் அருகில் இருக்கும் கோ சாலைக்குச் சென்றோ அல்லது எதிர்ப்படும் பசு மாட்டிற்கு உணவாக வழங்கிட வேண்டும். அதன் பிறகு நீங்கள் மீண்டும் இல்லம் திரும்பி நீராடி இறைவனைத் தொழுது உங்களுடைய வழக்கமான கடமைகளை மேற்கொள்ள வேண்டும். இதனை தொடர்ந்து ஒவ்வொரு வியாழக்கிழமையும் தவறாது மேற்கொண்டு வரும் போ...து தொழில் லாபகரமாக இயங்கத் தொடங்கும்.
தொகுப்பு: சுபயோக தாசன்















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM