தென்தீபம் - இதழ் 9க்கான ஆக்கங்கள் கோரப்படுகின்றன

23 Oct, 2025 | 04:54 PM
image

(எம்.நியூட்டன்)

தீவுகள் தெற்கு வேலணை பிரதேச கலாசாரப் பேரவையினால் ஆவணப்படுத்தும் வகையிலமைந்து வெளியிடப்படவுள்ள தென்தீபம் - இதழ் 9க்கான ஆக்கங்கள் வேலணை பிரதேசத்தைச் சார்ந்த எழுத்தாளர்கள், கல்விப்புலம் சார்ந்தவர்கள், கலைஞர்கள், படைப்பாளிகள், வேலணை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், வேலணை பிரதேசத்திலுள்ள அரச சேவை அலுவலக உத்தியோகத்தர்களிடமிருந்தும் மற்றும் வேலணை பிரதேசம் சார்ந்த ஆக்கங்களை வழங்க விரும்பும் ஏனைய பிரதேசத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களிடமிருந்தும் கோரப்படுகின்றன. 

வேலணை பிரதேசத்தின் கலை, கலாசாரம், வரலாறு, வழக்காறுகள், கிராமங்கள், சமுக வாழ்வியல், தொல்லியல் மரபுரிமைகள், கிராம நாமங்கள், நாட்டுப்புறவியல், ஆன்மிகம் போன்ற பண்பாட்டம்சங்களை பிரதிபலிக்கும் வகையிலான ஆய்வுக் கட்டுரைகள், கவிதை, சிறுகதை, ஆவணத்தரவுகள், நேர்காணல்கள், பல்சுவை அம்சங்கள் போன்ற ஆக்கங்களை வழங்க முடியும்.

படைப்பாளிகளின் ஆக்கங்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் வகையிலும் பிரதேசத்தின் தரவுகளை ஆவணப்படுத்தி வெளிக்கொணரும் வகையில் இந்த இதழானது அமையவுள்ளது. 

ஆக்கங்களை வழங்க விரும்புவோர் எதிர்வரும் 31.03.2026க்கு முன்னர் வேலணை பிரதேச கலாசார பிரிவில் வழங்குமாறு கேட்டுக்கொள்வதுடன் தபால் மூலம் அனுப்ப விரும்புவோர் பிரதேச செயலாளர், பிரதேச செயலகம், வேலணை அல்லது செயலாளர், வேலணை பிரதேச கலாசார பேரவை, பிரதேச செயலகம்,வேலணை எனும் முகவரிக்கு அனுப்பிவைக்க முடியுமெனவும் கிடைக்கப்பெறும் ஆக்கங்கள் கலாசார பேரவையின் மதிப்பீட்டுக்குழுவின் தீர்மானத்திற்கமைவாக தென்தீபம் இதழ் 9இல் உள்ளடக்கப்படுமெனவும் அனுப்பி வைக்கப்படும் ஆக்கங்கள் தொடர்பிலான பொறுப்புக்கள் அனைத்தும் படைப்பாளியையே சாரும் என்பதனை உறுதிப்படுத்தி அனுப்புதல் வேண்டும் என தீவுகள் தெற்கு வேலணை பிரதேச செயலாளரும் கலாசாரப் பேரவைத் தலைவருமான அகிலன் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் 100...

2025-12-11 01:30:52
news-image

எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான பொறுப்புக்கூறல் சர்வதேசத்தின்...

2025-12-11 01:27:01
news-image

கைது செய்யப்பட்டவரை நீண்டகாலம் தடுத்து வைப்பது...

2025-12-11 01:22:45
news-image

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்லாசி வேண்டி நாடளாவிய...

2025-12-10 23:51:41
news-image

30 க்கு மேற்பட்ட நீர் இறைக்கும்...

2025-12-10 23:42:06
news-image

ஆசிய அனர்த்த முன்னாயத்த நிலையத்திடமிருந்து இலங்கைக்கு...

2025-12-10 23:40:07
news-image

ஐரோப்பிய ஒன்றியம் 1.8 மில்லியன் யூரோ...

2025-12-10 23:33:34
news-image

திருகோணமலை – மட்டக்களப்பு சாலையில் லொறியும்...

2025-12-10 23:27:28
news-image

கருணை மிகுந்த செயல் பெரும் நம்பிக்கையை...

2025-12-10 19:10:24
news-image

ஊழலற்ற அரச நிர்வாகத்தால் உலக நாடுகள்...

2025-12-10 18:59:59
news-image

இந்திய மீனவர் அத்துமீறல்  வடக்குமாகாண மீனவர்பிரச்சினைகள்...

2025-12-10 21:18:26
news-image

வடக்கு - கிழக்கு மலையகத்துக்கான புகையிரத...

2025-12-10 18:28:06