அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மகளிர் உலகக் கிண்ணப் போட்டியில் இங்கிலாந்து 244 - 9 விக்.

Published By: Vishnu

22 Oct, 2025 | 07:21 PM
image

(நெவில் அன்தனி)

இந்தூர் ஹொல்கார் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 144 ஓட்டங்களைப் பெற்றது.

போட்டியின் 40ஆவது ஓவரில் இங்கிலாந்து  அதன்  6ஆவது விக்கெட்டை இழந்தபோது  மொத்த எண்ணிக்கை 166 ஓட்டங்களாக இருந்தது.

எனினும் மத்திய வரிசை வீராங்கனைகளின் சிறந்த பங்களிப்புடன் இங்கிலாந்து கௌரவமான மொத்த எண்ணிக்கையைப் பெற்றது.

முன்வரிசையில் டமி போமொன்ட் நிதானத்துடன் 105 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 78 ஓட்டங்களைப் பெற்றார்.

அவரைவிட அமி ஜோன்ஸ் (18) ஹீதர் நைட் (20), சொஃபியா டன்க்லி (22), அலிஸ் கெப்சி (38), சார்லி டீன் (26) சொஃபி எக்லஸ்டோன் (10 ஆ.இ.) ஆகியோர் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

245 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு அவுஸ்திரேலியா துடுப்பெடுத்தாடவுள்ளது.

இந்த வருட மகளிர் உலகக் கிண்ணப் போட்டியில் அவுஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் மாத்திரமே தோல்வி அடையாத அணிகளாக இருக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

22ஆவது திருத்தம் நிறைவேற்றப்படுவது உறுதி –...

2026-09-07 21:29:19
news-image

தோல்வி அடையாத அணிகளான அப்கன்ட்றி லயன்ஸ்,...

2026-09-07 20:29:17
news-image

நியூ யங்ஸுக்கு எதிராக ஏகப்பட்ட கோல்களைத்...

2026-09-07 20:19:26
news-image

சுவிஸ் கராத்தே லீக்: இத்தோசுக்காய் கழக...

2026-09-07 16:25:36
news-image

சுப்பர் சிக்ஸுக்கு செல்ல சீ ஹோக்ஸ்...

2026-09-07 15:29:09
news-image

20 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண தகுதிகாணில்...

2026-09-07 13:12:09
news-image

ஹர்ஷித்தாவின் நிதானமான துடுப்பாட்டம் இலங்கையின் அரை...

2026-09-07 09:05:46
news-image

ரட்னம் கழகத்தை வீழ்த்தி சுப்பர் சிக்ஸ்...

2026-09-07 15:06:57
news-image

மத்தியஸ்தரின் தவறான தீர்ப்புகளுக்கு மத்தியில் டிபெண்டர்ஸ்...

2026-09-06 15:08:03
news-image

டயமண்ட் லீக் இறுதிப் போட்டியில் ருமேஷ்...

2026-09-06 10:39:58
news-image

புளூ ஈக்ள்ஸ் கழகத்திடம் றினோன் கழகம்...

2026-09-04 20:46:15
news-image

றினோன் - புளூ ஈக்ள்ஸ் அணிகள்...

2026-09-04 13:44:57