எம்மில் பலரும் தங்களது நாளாந்த வாழ்க்கைக்கான தேவைகள் குறித்து ஆசைப்படுவது கூட பல தருணங்களில் நிறைவேறுவதில்லை. சிலர் தங்களுடைய தகுதிக்கு மீறி பல விடயங்கள் மீது ஆசை கொள்வர். இதுபோல் சிலருக்கு அவர்களின் நியாயமான ஆசைகள் கூட நிறைவேறாததற்கும்.. பலரின் பேராசைகள் நிராசையாவதற்கும் பின்னணியில் ராகு பகவானே காரணமாக இருக்கிறார். உங்களது ஜாதகத்தில் ராகு பகவான் பாதக ஸ்தானத்தில் அமர்ந்து , ராகு திசை, ராகு புத்தி, ராகு அந்தரம் ஆகியவை நடைபெற்றால்... உங்களுக்கு ராகு பகவானால் கெடு பலன்கள் ஏற்படக்கூடும். இதனை தவிர்த்து ராகு பகவானின் பரிபூரணமான ஆசியை பெற்று நல்ல பலன்களை பெற வேண்டும் என்றால்.. அதற்கும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் சில சூட்சமமான குறிப்புகளை வழங்கியிருக்கிறார்கள்.
இதற்கு தேவையான பொருட்கள் : கோமேதகம் கல்
உங்களுடைய நண்பர்கள் மூலமாக தரமான கோமேதகம் கல்லை தெரிவு செய்து கொள்ளுங்கள். இந்த கல்லை வெள்ளி -தங்கம் -தாமிரம் -உள்ளிட்ட உலகத்தால் தயாரிக்கப்பட்ட மோதிரத்தில் பொருத்தியும் அதனை ஆபரணமாக அணியலாம் அல்லது கோமேதகம் கல்லை மட்டும் தனியாக எப்போதும் உடன் வைத்திருக்கலாம். அத்துடன் மட்டும் நில்லாமல் ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து ராகு கால தருணமான காலை ஒன்பது மணி முதல் 10:30 மணிக்குள்ளாக அருகில் இருக்கும் சிவாலயத்திற்கு சென்று அங்கு தனி சன்னதியுடன் அருள் பாலிக்கும் துர்க்கை அம்மனை வழிபட வேண்டும். இதனை தொடர்ந்து மேற்கொண்டு வரும்போது ராகு பகவானின் பரிபூரண அருள் கிடைக்க பெற்று உங்களது ஆசைகள் நிறைவேறுவதை அனுபவத்தில் காணலாம்.
தொகுப்பு: சுபயோக தாசன்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM