கால் வலிக்கான நிவாரண சிகிச்சை

22 Oct, 2025 | 06:39 PM
image

இன்றைய திகதியில் எம்மில் பலரும் ஒரே இடத்தில் அமர்ந்து பணியாற்றுவதாலும்.. வெவ்வேறு கோணங்களில் உடலை வருத்திக் கொண்டு பணியாற்றுவதாலும்.. காலில் வலி ஏற்படுவது அதிகரிக்கிறது. பலருக்கு கெண்டைக்கால், பாதம் ஆகிய பகுதிகளில் வலி ஏற்படும். இவர்கள் பெரும்பாலும் வைத்திய நிபுணர்களை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெறுவார்கள். குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு மீண்டும் இவர்களுக்கு அத்தகைய பாதிப்பு ஏற்படும். இந்நிலையில் இது தொடர்பாக காலில் வலி ஏற்பட்டவர்கள் அருகில் உள்ள வைத்திய சாலையில் பணியாற்றும் ரத்தநாள சிகிச்சை நிபுணரை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும் என வைத்தியர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

காலில் வலி ஏற்பட்டால் பெரும்பாலும் சிரை ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டிருப்பது முதன்மையான காரணமாகும். இதயத்திலிருந்து வெளியாகும் குருதி ஓட்டம் உடல் முழுவதும் பயணித்து அதன் பிறகு உடலில் உள்ள அசுத்தங்களை சுமந்து கொண்டு சிரை ரத்த நாளம் வழியாக இதயத்திற்கு மீண்டும் செல்கிறது. இத்தகைய ரத்த நாளங்கள் கால் பகுதியில் இயங்குவதால்.. இதில் ஏதேனும் அடைப்பு பாதிப்பு ஏற்பட்டால்.. வலி உருவாகிறது. சிலருக்கு வீக்கமும் உண்டாகும். இதற்காக ரத்த நாள சிகிச்சை நிபுணரை அணுகினால் அவர்கள் இதற்கான பிரத்யேக பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைப்பார்கள். அதனைத் தொடர்ந்து பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானித்து நவீன மருத்துவ தொழில் நுட்பத்துடன் கண்டறியப்பட்ட பிரத்யேக மருந்தியல் சிகிச்சையை வழங்கி நிவாரணம் வழங்குவார்கள். வெகு சிலருக்கு மட்டுமே சத்திர சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணத்தை அளிப்பார்கள். இத்தகைய சிகிச்சைக்குப் பிறகு அவர்களுக்கு மீண்டும் கால் வலி பாதிப்பு ஏற்படாது. அத்துடன் வைத்தியர்கள் பரிந்துரைக்கும் வாழ்க்கை நடைமுறையை பின்பற்றத் தொடங்கினால்.. கால் வலி என்பது மீண்டும் ஏற்படாது என உறுதியாக கூறலாம்.

வைத்தியர் வேலவன்

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிராடிகினீசியா எனும் மெதுவான இயக்கம் -...

2025-11-10 18:24:20
news-image

பாலிட்ராமா எனும் பாதிப்பிற்குரிய நவீன ஒருங்கிணைப்பு...

2025-11-08 18:11:27
news-image

குறை மாதத்தில் பிறக்கும் பிள்ளையை பாதுகாப்பாக...

2025-11-07 18:22:58
news-image

குறட்டை விடுவதற்கு உடல் எடை அதிகம்...

2025-11-06 16:55:26
news-image

டைப் 2 சர்க்கரை நோய் பாதிப்பிற்கான...

2025-11-04 18:18:49
news-image

மாரடைப்பு பாதிப்பு ஏற்படுமா? என்பதனை அறிய...

2025-11-03 17:30:29
news-image

முதுகெலும்பு பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2025-11-01 15:03:10
news-image

செயன்முறை கருத்தரிப்பு சிகிச்சையில் அறிமுகமாகி இருக்கும்...

2025-10-31 18:09:47
news-image

இதய செயலிழப்பு நோயாளிகளுக்கு தண்ணீர் பருகுவதில்...

2025-10-30 18:09:24
news-image

எண்டோமெட்ரியோசிஸ் எனும் கருப்பையகப் பாதிப்பிற்குரிய அறிகுறிகள்...

2025-10-29 18:16:57
news-image

சர்க்கரை நோய்க்கும், இதய பாதிப்பிற்கும் உள்ள...

2025-10-28 17:08:30
news-image

லிம்போபுரோலிஃபெரேடிவ் டிஸார்டர் எனும் நிணநீர் மண்டல...

2025-10-27 15:17:25