வெலிகம பிரதேச சபை தவிசாளர் கொலை : பக்க சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படும் - அரசாங்கம்

Published By: Digital Desk 1

22 Oct, 2025 | 04:20 PM
image

எம்.மனோசித்ரா

வெலிகம பிரதேச சபை தவிசாளர் யார் என்ற தனிப்பட்ட காரணிக்கு அப்பால் பொலிஸாரால் பக்க சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படும். விசாரணைகள் நிறைவடையும் வரை இந்தக் கொலை தொடர்பில் கருத்துக்களை வெளியிடுவது பிரயோசனமற்றது. இவ்வாறான திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் யாரானாலும் அவர்கள் நிச்சயம் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் புதன்கிழமை (22) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

வெலிகம பிரதேச சபை தவிசாளர் யார் என்ற தனிப்பட்ட காரணிக்கு அப்பால் பொலிஸாரால் பக்க சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படும். அரசியல்வாதியானாலும், வர்த்தகரானாலும், வேறு தொழில்களில் ஈடுபடுபவர்களானாலும், பொது மக்களானாலும் இவ்வாறான துப்பாக்கிச்சூடுகளுக்கு இலக்காகும் போது பொலிஸாரால் சுயாதீன விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.

அந்த விசாரணைகளுக்கமைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு சட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. சிலர் தடுப்புகாவலில் வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். உள்நாட்டு கைது செய்யப்படுபவர்களிடம் முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் கிடைக்கும் தகவல்களுக்கமைய வெளிநாடுகளிலுள்ள சந்தேகநபர்களும் கைது செய்யப்படுகின்றனர்.

அந்த வகையில் இந்தக் கொலை தொடர்பிலும் 4 பொலிஸ் விசாரணை குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. விசாரணைகள் நிறைவடையும் வரை இது தொடர்பில் கருத்துக்களை வெளியிடுவது பிரயோசனமற்றது. இந்த குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்கான பாரிய பொறுப்பு அரசாங்கத்திடமுள்ளது. பாதாள உலகக் குழுக்களுக்கிடையில் துப்பாக்கிகளின் புலக்கத்தால் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களும் அதிகரித்துச் செல்கின்றன.

இதனை முற்றாக ஒழிப்பதற்காக சமூகம் என்ற ரீதியில் அனைவரும் இது குறித்த புரிதலுடன் செயற்பட வேண்டும். இவற்றுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் படிப்படியாகக் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற 12,000 கிலோ...

2025-12-08 02:33:22
news-image

அட்டமஸ்தானாதிபதி தேரரை ஜனாதிபதியை சந்தித்தார்

2025-12-08 01:10:56
news-image

இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்து நன்றி தெரிவித்த...

2025-12-07 22:47:34
news-image

தமிழகத்திலிருந்து கப்பலில் நாட்டை வந்தடைந்த நிவாரண...

2025-12-07 22:16:46
news-image

அலுவலக புகையிரதங்களைப் பயன்படுத்தியோருக்கான விசேட பஸ்...

2025-12-07 18:34:43
news-image

சட்டவிரோத கட்டிடங்கள் நிர்மாணிக்கப்படுவதைத் தடுக்கத் தேவையான...

2025-12-07 21:04:30
news-image

அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட நீர் வழங்கல்...

2025-12-07 18:13:48
news-image

கண்டி மாவட்டத்தில் நிலச்சரிவு - மக்களை...

2025-12-07 20:57:07
news-image

புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது...

2025-12-07 20:41:57
news-image

உணவுப் பொருட்களை வாங்கும்போது அவதானமாக இருக்குமாறு...

2025-12-07 18:36:26
news-image

யாழ். பண்ணை கடலில் நீச்சலடிச்ச நால்வரில்...

2025-12-07 19:48:12
news-image

சூறாவளி டிட்வா நிவாரணத்திற்காக அமெரிக்க விமானப்படையின்...

2025-12-07 19:35:08