(லியோ நிரோஷ தர்ஷன்)

சீன கடற்படை வீரர்களையோ, படையினரையோ இலங்கையில் நிறுத்தி வைத்திருக்கவில்லை. புலனாய்வுப் பணிகளும் இல்லை. எனவே இந்தியப் பெருங்கடலில் இலங்கையின் கேந்திர அமைவிடத்தை சீனா தனது மூலோபாய மற்றும் பாதுகாப்புத் தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொள்ளாது என இலங்கைக்கான அந்நாட்டு தூதுவர் யூ ஷியாங்லிங் தெரிவித்தார்.

 

இலங்கையின் அபிவிருத்திக்கு எமது பங்களிப்புகள் தொடர்வதற்கு இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்பே காரணமாகின்றது. 

பட்டுப்பாதையின் நலன்களை இலங்கையும் அடைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பே காணப்படுகின்றது. 

ஆனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வழங்கிய உறுதிமொழிகளை மீறப்போவதில்லை. அம்பாந்தோட்டை துறைமுகம் சீன கடற்படைதளமாகாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு துறைமுகத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்த சீன கடற்படையின் மருத்துவ கப்பலை வரவேற்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே சீனத் தூதுவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.