அமைச்சர் மங்கள சமரவீரவின் பிரத்தியேக உதவியாளர் ஒருவர் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டதாக வெளியான செய்தி பொய்யான செய்தியென நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மங்கள சமரவீரவின் பிரத்தியேக உதவியாளர் மற்றும் அவரது நண்பர்கள் போதைப்பொருளுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டதாக சில ஊடகங்கள் உண்மைக்குமாறான செய்திவெளியிட்டுள்ளதாகவும் அந்த செய்தியால் அமைச்சருக்கு எதிராக சேறுபூசும் நடவடிக்கை இடம்பெற்றுவருவதாகவும் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.