தெற்கு அதிவேக வீதியின் கஹதுடுவைக்கும் கொட்டாவைக்கும் இடையிலான வாகன போக்குவரத்து மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது.

கஹதுடுவைக்கும் கொட்டாவைக்கும் இடைப்பட்ட பகுதியில் நேற்று மாலை லொறியொன்று தடம்புரண்டதனால் வீதியின் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டது.

மாத்தளையிலிருந்து கொழும்பு நோக்கி வந்த வாகனங்கள் கஹதுடுவ பிரவேசத்தின் ஊடாக வெளியேற்றப்பட்டது. 

இந்நிலையில், நேற்று நள்ளிரவு குறித்த லொறி அகற்றப்பட்டு தெற்கு அதிவேக வீதியின் போக்குவரத்து வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.