வவுனியா மாநகர சபையின் சபை செயற்பாடுகளுக்கு இடைக்கால தடை - மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு 

Published By: Vishnu

21 Oct, 2025 | 08:09 PM
image

வவுனியா மாநகர சபையின் சபை செயற்பாடுகளுக்கு மேல் முறையீட்டு நீதிமன்றம் எதிர்வரும் 19ஆம் திகதி வரை இடைக்கால தடை விதித்து செவ்வாய்க்கிழமை (21) தீர்ப்பளித்துள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

வவுனியா மாநகர சபையில் ஆட்சியமைப்பதற்கு ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணிக்கு ஆதரவு கோரப்பட்ட போது ஜனநாயக தேசிய முன்னணியின் போனஸ் ஆசனத்தினால் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட பரமேஸ்வரன் கார்த்தீபன் பிரதி மேயர் பதவி கோரி ஆதரவளித்திருந்தார்.

எனினும் அவர் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்குட்பட்ட எல்லையில் வசித்த நிலையில் மாநகர சபையில் போட்டியிட்டமை அதனூடாக பதவியை பெற்றமை சட்ட விதிகளுக்கு மீறிய செயற்பாடு என மாநகர சபை உறுப்பினர்களான தேசிய மக்கள் சக்தியின் சார்பில் க. விஜயகுமாரும் சுயேற்சை குழு உறுப்பினரான பிரேமதாஸ் சிவசுப்பிரமணியமும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

இதன் பிரகாரம் கடந்த நான்கு தவணைகளின் பின்னர் செவ்வாய்க்கிழமை (21) நீதிமன்றத்தினால் மேற்குறித்த அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வழக்கு தாக்கல் செய்தவர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2026-08-08 06:16:04
news-image

ஐக்கிய தேசிய கட்சி கோரிக்கை: சிறைச்சாலை...

2026-08-08 06:14:24
news-image

துஷ்பிரயோக நோக்கங்களைக் கொண்ட நபர்கள், கைதிகளை...

2026-08-08 06:11:13
news-image

ரவி செனவிரத்னவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்குத்...

2026-08-08 05:45:32
news-image

மன்னார் பேசாலையில் பற்றைக்காட்டில் ஆண் ஒருவரின்...

2026-08-08 05:42:37
news-image

சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் பிரதானிகளுக்கு...

2026-08-07 12:20:20
news-image

சிஐடி பணிப்பாளர் ஷானி அபேசேகர பிரதிப்...

2026-08-07 23:54:30
news-image

சிறைச்சாலை வன்முறைகள் அரசாங்கத்தின் திட்டமிட்ட சதியா?...

2026-08-07 16:08:47
news-image

இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் எனக்கு எதிராக...

2026-08-07 14:52:22
news-image

சத்துருக்கொண்டான் படுகொலை முறைப்பாட்டாளரை சிஐடி அழைப்பது...

2026-08-07 15:14:41
news-image

சிறைச்சாலை கட்டமைப்பை பலவீனப்படுத்த சதி: அமைச்சர்...

2026-08-07 16:07:58
news-image

விலை அதிகரிப்புக்கு மத்தியில் அரசின் சமூக...

2026-08-07 15:06:00