இன்றைய சூழலில் எம்மில் பலரும் வைத்தியம் சார்ந்த அல்லது ஆரோக்கிய குறைபாடு சார்ந்த பல தகவல்களை இணையத்தின் மூலமாக தெரிந்து கொள்கிறார்கள். ஆனால் இதில் பலரும் தங்களது பாதிப்பு குறித்து தெரிந்துகொள்ளும் தவறான தகவல்களால் கூடுதலாக குழப்பமடைகிறார்கள். இதனால் வைத்தியர்கள் உங்களுக்கு எந்த சுகவீனம் ஏற்பட்டாலும்... இது தொடர்பாக வைத்தியர்களை சந்தித்து, அவர்களின் ஆலோசனையை பெற வேண்டும் என அறிவுறுத்துகிறார்கள். இந்நிலையில் எம்மில் பலருக்கும் முதுமையின் காரணமாக ஏற்படும் ஓஸ்டியோஓர்த்தரைடீஸ் எனும் பாதிப்பிற்கும், ரூமட்டாய்ட் ஓர்த்தரைட்டீஸ் எனும் பாதிப்பிற்கும் இடையேயான வேறுபாட்டை துல்லியமாக தெரிந்து கொள்ளாமல் குழப்பமடைந்து, முழுமையான மற்றும் முறையான சிகிச்சையை பெறுவதில் தயக்கம் காட்டுகிறார்கள். இதனால் இந்த இரண்டு பாதிப்பு குறித்த மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய வேறுபாட்டை வைத்தியர்கள் பின்வருமாறு விளக்குகிறார்கள்.
ஐம்பது வயதிற்கும் மேற்பட்ட முதியோர்கள் - உடற் பருமனால் பாதிக்கப்பட்டவர்கள் - புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள்- ஆகியோருக்கு கால் மூட்டு மற்றும் இடுப்பு மூட்டுகளில் ஏற்படும் வலி மற்றும் அது தொடர்பான பாதிப்புகளுக்குத் தான் ஓஸ்டியோஓர்த்தரடீஸ் என வகைப்படுத்துகிறார்கள். இருபது வயது முதல் நாற்பது வயதுக்குள் உள்ள பெண்களுக்கும், பெண்மணிகளுக்கும் மரபியல் காரணிகளாலும்.. புகைபிடிக்கும் பழக்கத்தாலும் உடலில் உள்ள சிறிய அளவிலான மூட்டுகளில் ஏற்படும் வலி தொடர்பான பாதிப்புகளைத் தான் ரூமட்டாய்ட் ஓர்த்தரைட்டீஸ் என வகைப்படுத்துகிறார்கள்.
நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போதும் அல்லது அலுவலகத்தில் உட்கார்ந்து பணியாற்றும் போதும் இடுப்பு வலி மற்றும் கால் மூட்டுகளில் வலி ஏற்பட்டால் அதனை ஓஸ்டியோஓர்த்தரைடீஸ் பாதிப்பு என அவதானிக்கலாம். அதே தருணத்தில் கைகளில் உள்ள சிறிய மூட்டுகள் அதாவது கை மூட்டு, மணிக்கட்டு மூட்டு ஆகிய பகுதிகளில் அதிகமான வலி இருந்தால் அதனை ரூமட்டாய்ட் ஓர்த்தரைட்டீஸ் என அவதானிக்கலாம். அதே தருணத்தில் இவர்களுக்கு ஓய்வுக்கு பிறகு வலி உண்டாகும். அதாவது காலையில் படுக்கையிலிருந்து எழுந்தவுடன் கைகளில் ஒருவித விறைப்புத்தன்மை இருப்பதாக தெரிவிப்பார்கள்.
இத்தகைய இரண்டு பாதிப்புகள் ஏற்பட்டிருந்தாலும்.. அதன் நுட்பமான வேறுபாட்டை உணர்ந்து, உரிய தருணத்தில் வைத்தியர்களை சந்தித்து, அவர்கள் பரிந்துரைக்கும் பரிசோதனைகளை மேற்கொண்டு, பாதிப்பினை துல்லியமாக அவதானித்து, அதற்கு ஏற்ற வகையில் நவீன மருத்துவ தொழில் நுட்பத்துடன் கண்டறியப்பட்ட பிரத்யேக மருந்தியல் சிகிச்சைகளை வழங்கி நிவாரணம் தருவார்கள். வெகு சிலருக்கு மட்டுமே சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டியதிருக்கும்.
வைத்தியர் ராஜ் கண்ணா
தொகுப்பு அனுஷா.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM