இலங்கையின் முன்னணி வணிக ரீதியான வனவளர்ப்பு நிறுவனமும், பெருந்தோட்டத்துறையில் நிலையான மேலாண்மைக்கு அங்கீகாரம் பெற்ற நிறுவனமுமான சதாஹரித பிளாண்டேஷன், அண்மையில் மத்துகம பன்தியா தோட்டத்தில் அமைந்துள்ள அதன் ஆய்வு நிலப்பரப்பில் அகர்வுட் அறுவடை பரிசோதனையை முன்னெடுத்திருந்தது. 

இத்தகைய மரங்களில் குறைந்தளவான(1-5 %) அகர்வுட் பிசினே உற்பத்தியாகின்ற போதிலும், உலக அரங்கில் அகர்வுட்டிற்கான கேள்வி அதிகரித்துள்ளமையால் இவ்வகையான மரங்களை வெட்டுதல் மற்றும் சட்டரீதியற்ற முறையில் அறுவடை செய்யப்பட்டு வருவதை காணக்கூடியதாக உள்ளது. இலங்கையின் ஈரலிப்பான மற்றும் இடைவெப்ப வலயங்களில் ‘வல்லப்பட்டை’ மரங்கள் வளர்வதுடன், இலங்கையிலிருந்து சர்வதேச சந்தைகளுக்கு அதிகம் கடத்தப்படும் மரங்களாகவும் இவை காணப்படுகின்றன.

பல தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி மற்றும் முதலீடுகள் ஊடாக அகர்வுட் அறுவடை தொடர்பான வணிக மற்றும் பொருளாதார ரீதியான சாத்தியமான தன்மைகளை சதாஹரித நன்குணர்ந்துள்ளது.

இலங்கையில் வணிக ரீதியான அகர்வுட் உற்பத்திக்கு CA Kit (Cultivation Kits) ஊடாக மாத்திரமே உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. இந்த முறைக்கான பிரத்தியேக காப்புரிமையை (Patent) இலங்கையில் சதாஹரித பிளாண்டேஷன் மட்டுமே கொண்டுள்ளது. சதாஹரித மூலம் CA-Kit சோதனைகளுக்கு பின்னர் விற்கப்படும் மற்றும் விநியோகிக்கப்படும் ‘எகியுலேரியா கரஸ்னா’ மரங்களிலிருந்து 60 - 80% வீதமான பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் என்பது தோட்ட விஜயத்தின் போது நிரூபனம் ஆகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சதாஹரித நிறுவனத்தைப் பொறுத்தவரை, ஆராய்ச்சி தரவுகளுக்கமைய வல்லப்பட்டையில் இயற்கையாக அகர்வுட் உற்பத்தியானாலும், மரத்தின் முழுமையான தண்டுப்பகுதிக்கு கடத்தப்படாமையால் இயற்கையான அகர்வுட் குறைந்தளவே உருவாக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. “இன்று நாம் பார்த்த CA-Kit சிகிச்சை முறையானது இந்த மரங்களில் அகர்வுட் உருவாக்கத்தை சிறப்பான மட்டத்தில் பேணுவதுடன், இதனை மேம்படுத்துவது தொடர்பிலும், இத்தகைய மரங்களில் வெவ்வெறு வகையான அகர்வுட்டினை உருவாக்குவது தொடர்பிலும் ஆய்வுகளை தொடர்ந்து முன்னெடுக்க நாம் எதிர்பார்த்துள்ளோம்” என சதாஹரித பிளாண்டேஷன் நிறுவனத்தின் உயர் ஆலோசகர் மருத்துவர்.உபுல் சுபசிங்க தெரிவித்தார்.

சதாஹரித பிளாண்டேஷன் நிறுவனத்தின் தலைவர் சதிஷ் நவரத்ன தெரிவித்ததாவது, “பொறுப்பு வாய்ந்த முன்னணி வணிக ரீதியான வனவளர்ப்பு நிறுவனம் எனும் ரீதியில், பசுமை பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கான தேவை மற்றும் தொடர்ந்து நிலையான அகர்வுட் அறுவடையில் முக்கிய பங்கை வகிப்பது தொடர்பில் சதாஹரித விழிப்புணர்வுடன் செயற்பட்டு வருகிறது. எமது CA-Kit தொழில்நுட்பமானது இன்று இங்கு வருகை தந்தவர்களுக்கு அதன் செயற்திறனையும், உறுதியான முடிவுகளையும் வெளிக்காட்டியுள்ளதுடன், இது எமக்கும், எமது முதலீட்டாளர்களுக்கும் ஒரு வலிமையாக காணப்படுகிறது” என்றார். 

‘சதாஹரித மூலமாக அகர்வுட்டினை முதலீட்டு உற்பத்தியாக வர்த்தகமயமாக்கியதன் காரணமாக இந்த நிறுவனம் வெளிநாட்டு வருவாய்க்கும், பல்வேறு பெருந்தோட்டங்கள் மற்றும் பிரதேசங்களில் வளர்க்கப்பட்டு வரும் அகர்வுட் துறையில் பல்வேறு வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொடுத்து உள்நாட்டு பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிப்பு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. நாட்டிற்கு வெளிநாட்டு வருவாய் ஈட்டிக்கொடுக்கும் மிகப்பெரிய நிறுவனங்களுள் ஒன்றாக நாம் உள்ளதுடன், அதனை மேலும் வலுப்படுத்தி வருகிறோம்” என சதாஹரித பிளாண்டேஷனின் பணிப்பாளர் ஜயம்பத்தி மிரண்டோ தெரிவித்தார். 

முதலீட்டாளர்களின் முதலீடுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் சதாஹரித நிறுவனம் அதன் பல்வேறு உற்பத்திகள் மீது உலகில் மிகப்பெரிய சந்தன விநியோகிப்பாளரான Wescorp அவுஸ்திரேலியா நிறுவனத்துடன் விற்பனை உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது. முதலீட்டு திரும்பல்களுக்கான உத்தரவாதம் எந்தவொரு முதலீட்டாளருக்கும் மிக முக்கிய விடயமாக அமைந்துள்ளது.

இதுவே கடந்த தசாப்தங்களில் நிறுவனம் தொடர்ச்சியாக வளர்ச்சியடைந்தமைக்கும், இலங்கையில் பசுமைஃவிவசாய முதலீடுகளுக்கான நம்பகமான நாமம் எனும் பெருமையையும் பெற்றுக்கொடுத்துள்ள நிறுவனத்தின மிக முக்கிய பலமாக காணப்படுகிறது.